வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கும் சில எளிய பரிகாரங்கள்..!!

சிவபெருமானை மனதில் நினைத்து செய்யும் சில எளிய பரிகாரங்கள் வாழ்க்கையில்  உங்கள் அனைத்து தடைகளையும் நீக்கி வெற்றியை தேடித் தரும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 31, 2022, 06:23 PM IST
  • சிவபெருமானின் அருள் கிடைக்கப் பெறுவதால் அகால மரணம் தவிர்க்கப்படுகிறது.
  • திங்கட்கிழமை அன்று பஞ்சாமிர்தத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • சிவன் அருளால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கும் சில எளிய  பரிகாரங்கள்..!! title=

திங்கட்கிழமை சிவன் வழிபாட்டுக்கு விசேஷமான நாள், மிகவும் உகந்த நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. சிவனின் அருளைப் பெறுவதற்காக பெரும்பாலானோர் திங்கட்கிழமை விரதம் கடைப்பிடிக்கின்றனர். சிவனின் அருளைப் பெற, திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி, வெற்றியை தேடித் தரும். இதனால் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைப் பெறுவதோடு, வாழ்க்கையில் இனிமையும் வளமும் சேரும். மேலும் அகால மரண அபாயமும் நீங்கும்.

திங்கட்கிழமைகளில் மேற்கொள்ள உள்ள சில எளிய பரிகாரங்கள்: 

1. திங்கட்கிழமை அன்று மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை 1008 முறை ஜபிக்கலாம். மேலும், சிவனுக்கு ருத்ராபிஷேகமும் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருள் கிடைக்கப் பெறுவதால் அகால மரணம் தவிர்க்கப்படுகிறது.

2. திங்கட்கிழமை நந்தி காளைக்கு பச்சைப் புல் கொடுப்பது மிகவும் நல்லது. இதனால், மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கிறது. இத்துடன் பணம் தொடர்பான பிரச்சனையும் நீங்கும்.நீண்ட நாள் கைக்கு வராத பண, உங்களிடம் வந்து சேரும்.

மேலும் படிக்க |  Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

3. வறுமை நீங்க, திங்கட்கிழமையன்று ஏதேனும் சிவன் கோவிலில் 'தரித்ராதஹன் ஸ்தோத்திரம்' பாராயணம் செய்யுங்கள். 

4. திங்கட்கிழமையன்று சிவனுக்கு எள் மற்றும் பேரிச்சம்பழம் படைக்கவும். இது பாவங்களிலிருந்து உங்களை விடுவிக்கிறது. அதனுடன் மகிழ்ச்சியும் கூடுகிறது.

5. நீண்ட காலமாக குழந்தை  இல்லாமல் வாடுபவர்கள் குழந்தை செல்வத்தை பெற, திங்கட்கிழமை, கோதுமை மாவினால் 11 சிவலிங்கம் செய்து, அதனை11 முறை அபிஷேகம் செய்யவும்.

6. திங்கட்கிழமை, வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் செல்வமும் வளமும் பெருகும்.

7. திங்கட்கிழமை ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள். இப்படி செய்வதால் அன்னபூரணி எப்போதும் வீட்டில் வாசம் செய்கிறாள். மேலும் உணவுக்கு பஞ்சம் என்பதே ஏற்படாது.

8. நீண்ட காலமாக நிறைவேறாத மன விருப்பங்கள் நிறைவேற, திங்கட்கிழமை  அன்று, 21 வில்வ இலைகள் மீது ஓம் நம சிவாய என்று எழுதுங்கள். அதன் பிறகு சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள்.

9. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், திங்கட்கிழமை அன்று பஞ்சாமிர்தத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சிவன் அருளால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News