Shani Dev: நல்லது மற்றும் கெட்டது என நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்களுக்கும் ஏற்ற பலனை சனி பகவான் வழங்கி வருகிறார், இதன் காரணமாகவே சனி பகவானை நாம் நீதியின் கடவுள் என்று அழைக்கிறோம். இந்து மத சாஸ்திரத்தின்படி, வாரத்தில் சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிறப்பான சனிக்கிழமை நாளில் சனிபகவானை வழிபடுவதன் மூலம் சனிபகவானின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் அவரை வழிபட்டு வர நமக்கு இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் பிரகாசிக்க தொடங்கும். மறுபுறம் சனி தெய்வத்தின் அசுர பலன் காரணமாக, ஒரு நபரின் மகிழ்ச்சியும் அமைதியும் பறிக்கப்பட்டு, வலிகள் இருக்கும். இந்து மத சாஸ்திரங்களின்படி, நீங்கள் சனி பகவானின் ஆசீர்வாதங்களை பெற விரும்பினால், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் அந்த பகவானை மனதார வழிபட வேண்டும்.
மேலும் படிக்க | சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வைரம் போல் ஜொலிக்கும்
சனிபகவானை முறையாக வழிபட வேண்டுமென்றால் சனிக்கிழமையன்று சூரிய உதயத்திற்குப் பிறகு அரச மரத்தை வணங்க வேண்டும், அடுத்ததாக கொஞ்சம் நீரை வார்த்துவிட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சனி தேவரின் அருள் நமக்கு எப்போதும் பரிபூரணமாக கிடைக்கும், பொதுவாக அரச மரத்தின் அடியில் சனி தேவன் வசிப்பதாக நம்பப்படுகிறது என்பதால் சனி பகவானின் அனுக்கிரகத்தை பெற நாம் அரசமரத்தை வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. சனிக்கிழமை நாளில் முதல் வேலையாக காலையில் நன்கு தலைக்கு குளித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும், இந்த நாளில் முடிந்தால் சுத்தமான கருப்பு ஆடைகளை அணியுங்கள். ஏனென்றால் சனி பகவானுக்கு கருப்பு வண்ணத்தில் தான் வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது, இது அவருக்கு பிடித்த நிறம் என்பதால் அந்த நிறத்தில் நாம் ஆடையை அணிவதன் மூலம் அவரது ஆசி நம் மீது படும். சனிக்கிழமை நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் கோயிலுக்குச் சென்று சனிபகவானை வழிபடுவது நல்லது. சனிக்கிழமையன்று மாலை நேரத்தில் ஆலமரம் மற்றும் அரச மரங்களின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி, பிறகு மரத்திற்கு பால் மற்றும் தூபம் காட்ட வேண்டும். சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சனி கோவிலில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும், இதனுடன் சில கருப்பு எள்ளும் விளக்கில் போட்டு விளக்கை ஏற்றுவது சிறப்பானது.
சனிக்கிழமையன்று சனி தேவரின் மந்திரம் மற்றும் சாலிசாவை ஓத வேண்டும். இதன் காரணமாக, சனி தேவரின் அருள் நிலைத்து, ஜாதகத்தில் சேட் சதியின் தாக்கம் குறைகிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் அல்லது ஹனுமான் சாலிசாவை ஓத வேண்டும். சனி பகவானை வழிபடும்போது நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அவரை வணங்கும்போது நேரே அவர் கண்களை நாம் காணக்கூடாது. மத நம்பிக்கைகளின்படி, சனி கடவுளை வணங்கும்போது, நமது கண்கள் கீழே இருக்க வேண்டும், சனி பகவானின் கண்களை நாம் நேராக தொடர்பு கொள்வதன் மூலம், சனி தேவனின் தீய கண் நம் மீது விழ நேரிடும், இதனால் பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். சனி சாந்தி பூஜையின் போது, சனி பகவானுக்கு எண்ணெய் குளியல் கொடுக்கப்படுகிறது. இது தவிர சனிபகவானுக்கு உளுந்து, வெல்லம், எள் ஆகியவை சிறப்பாக வழங்கப்படுகிறது, கூடுதலாக ஆணி போன்ற இரும்புப் பொருளும் வழங்கப்படுகிறது. ஆணிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அவசியமில்லை, எந்த இரும்பு உலோகத்தையும் வழங்கலாம். எமதர்மராஜாவுக்கு இரும்பை சமர்ப்பித்து மகிழ்ச்சி அடைவது போல, சனி பகவானுக்கும் இரும்பை சமர்ப்பித்து அவரை மகிழ்ச்சி அடைய செய்யலாம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ