September Monh Planet Transit Effect 2024: இன்று முதல் செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் பல பெரிய கிரகங்கள் தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மூன்று பெரிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்கப் போகின்றன. அதன்படி செப்டம்பர் 4 ஆம் தேதி, புதன் கிரகம் சிம்மத்திற்கு மாறுகிறது, பின்னர் செப்டம்பர் 16 ஆம் தேதி, சூரியன் புதனின் ராசியான கன்னியில் நுழைய உள்ளது. அதே நேரத்தில், செப்டம்பர் 18 அன்று, சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பெயர்ச்சி அடைகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் பாதகமான பலன்களை தரும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
செப்டம்பர் மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சியின் தாக்கம் இருக்கும்:
மேஷம் (Aries Zodiac Sign): ஜோதிடத்தின் படி, சூரியன் மேஷத்தின் ஆறாம் வீட்டில் பெயரச்சி அடையப் போகிறார், இதன் காரணமாக செப்டம்பர் நடுப்பகுதியில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், இந்த மாதத்தின் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கல்வி துறையில் சாதகமான பலனைத் தரும். மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அதிகரிக்கும். மனரீதியான பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து கொள்ளும். எதிரி தரப்பும் வலுவடையும். வேலையைக் கெடுக்கும் முயற்சிகள் இருக்கலாம், எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனுடன், நீங்கள் பணத்தின் விஷயங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க | செவ்வாய் உச்ச பெயர்ச்சி.. அதிர்ஷ்டம், பணம், புகழ் இந்த ராசிகளுக்கு
மிதுனம் (Gemini Zodiac Sign): இந்தக் காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். அதே சமயம் இந்த மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு அன்னையின் வீடு என்று சொல்லப்படும் நான்காவது வீட்டில் சூரியன் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும், அவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும். பெரிய தொகையை பரிவர்த்தனை செய்வதற்கு முன் கவனமாக இருக்கவும். பணத்தை முதலீடு செய்வதற்கு முன், நிச்சயமாக ஆலோசனையைப் பெறுங்கள்.
கன்னி (Virgo Zodiac Sign): இந்த ராசியின் முதல் வீட்டில் சூரியன் நுழையப் போகிறார். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், எனினும் உங்களின் கோபம் மற்றும் ஈகோ அதிகரிக்கலாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பயணங்களின் போது திருட்டு ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும். தாம்பத்திய வாழ்வில் சில சச்சரவுகள் வரலாம், உரையாடலின் போது கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் நிதி நிலை மோசமாகலாம்.
மகரம் (Capricorn Zodiac Sign): ஜோதிட சாஸ்திரப்படி இந்த மாதம் மகர ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். வருமானத்தை விட செலவுகள் கூடும். இதனால் கடன் வாங்க நேரிடலாம். அத்தகைய சூழ்நிலையில், திரட்டப்பட்ட பணத்தை மட்டுமே செலவிடுவது நல்லது. மகர ராசிக்காரர்கள் உடல்நலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், சில நாள்பட்ட நோய்கள் உங்களை பாதிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ