சனீஸ்வரரால் பிரச்சனை முடிந்தாலும் சிக்கலைக் கொடுக்க தயாராகிவிட்டார் புதன்

Mercury Transit Bad Effects: சூரியன், சுக்கிரன், நிழல் கிரகமான கேது மற்றும் எதிரியான சந்திரன் ஆகிய மூன்றும் புதன் சஞ்சாரத்தின் போது துலாம் ராசியில் இணைகின்றனர். இதனால் ஏற்படும் பஞ்ச கிரஹி தோஷத்தால் 3 ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2022, 08:28 PM IST
  • பஞ்ச கிரஹி தோஷத்தால் 3 ராசிக்காரர்களுக்கு பாதகம்
  • பயணங்களைத் தவிர்ப்பது நல்லது
  • வருமானத்திற்கு செலவை அடக்கினால் நிம்மதி
சனீஸ்வரரால் பிரச்சனை முடிந்தாலும் சிக்கலைக் கொடுக்க தயாராகிவிட்டார் புதன் title=

புதன் பெயர்ச்சி: ஜோதிடத்தில் சம கிரகமாக கருதப்படும் புதன் பெயர்ச்சி சிலருக்கு பாதகங்களையும் கொடுக்கவிருக்கிரது. சம கிரகம் என்றால், அதன் விளைவுகள் அது தொடர்புடைய மற்ற கிரகங்களைப் பொறுத்தது என்று பொருள் கொள்ள வேண்டும். புதன் ஒரு தீய கிரகத்துடன் இணைந்தால், அது சாதகமற்ற விளைவுகளை உருவாக்குகிறது, சுப கிரகங்களுடன் இணைந்தால் சாதகமான விளைவுகளை உருவாக்குகிறது. 12 ராசிகளில், புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளை ஆட்சி செய்யும் புதன் இன்னும் இரு நாட்களில் தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். துலா ராசிக்கு செல்லும் புதன் 3 ராசிகளுக்கு கெடுதலை செய்ய இருக்கிறார்.

துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி காலம்
அக்டோபர் தொடக்கத்தில் கன்னியில் தனது சொந்த பிற்போக்கு இயக்கத்தைத் தொடங்கிய புதன், இப்போது அந்த ராசியை விட்டு வெளியேறி, துலாம் ராசியில் செல்கிறார். புதன், அக்டோபர் 26, 2022 புதன்கிழமை அன்று பிற்பகல் 1:38 மணிக்கு துலாம் ராசியில் சென்றுவிடுவார்.

சூரியன், சுக்கிரன், நிழல் கிரகமான கேது மற்றும் எதிரியான சந்திரன் ஆகிய மூன்றும் புதன் சஞ்சாரத்தின் போது துலாம் ராசியில் இணைகின்றனர். இதனால் ஏற்படும் பஞ்ச கிரஹி தோஷத்தால் எந்தெந்த ராசிகளுக்கு கெடு பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | சூரிய கிரகணம் 2022: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும் 

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் 

விருச்சிகம்: புதன் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் செலவினங்களைக் கவனித்து சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வணிகர்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே  முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். நிதிச் சிக்கல்களையும் சந்திக்கலாம். பயணங்களையும் தவிர்க்கவும், ஏனெனில் பயணங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். 

கும்பம்: கும்பம் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் புதன், கும்ப ராசியினருக்கு கெடுபலன்களை அதிகமாகவேத் தருவார். திருமணமானவராக இருந்தால் மனக் கஷ்டம் அதிகரிக்கும். செய்யும் வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்காது. வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருப்பதால் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்களுடன் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

மீனம்: நான்காம் மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியான புதன் உங்கள் ராசியிலிருந்து எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இந்த நேரத்தில் உங்கள் தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம், இது குடும்பத்தில் நிம்மதியை குலைக்கும். மாணவர்களுக்கு கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம். திடீர் உடல் பிரச்சனைகளையும் சந்திக்கலாம். பயணங்களை தவிர்க்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News