வக்ர நிலையிலிருந்து மாறும் சனி பகவான்; நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

Saturn Transit 2022: சனி நீதியின் கடவுள் என்பதால், சனியின் அதிருப்தி வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் மோசமான பலன்களைப் பெற்று வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்க நேரிடலாம்.

Last Updated : Sep 5, 2022, 01:23 PM IST
  • நிதி நிலை மிகவும் சாதகமாக இருக்கும்.
  • ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வக்ர நிலையிலிருந்து மாறும் சனி பகவான்; நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்! title=

Saturn Transit 2022: சனி நீதியின் கடவுள் என்பதால், சனியின் அதிருப்தி வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் மோசமான பலன்களைப் பெற்று வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்க நேரிடலாம். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும். கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பிரவேசித்த போது, மீன ராசியில் சனியின் ஏழரை நாட்டு துவங்கியது. சனி தேவன் 2022 ஜூலை 12 ஆம் தேதி காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார்.

இதற்கிடையில், 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான், வக்ர நிலையில் இருந்து மாறி, தனது வழக்கமான நேர் இயக்கத்துக்கு மாறுவார். 2023, ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறது.

ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு ராசிகளின் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வேலையில் வெற்றி பெறுவார்கள். தலைமைப் பண்பு அதிகரிக்கும். நிதி நிலை மிகவும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சனி சஞ்சரிக்கும் போது, ​​மகர ராசியில் ஷஷ் என்ற பஞ்ச மகாபுருஷ யோகம் உருவாகும். இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் அளிக்கும். 

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

மகர ராசியில் சனி வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், சனியின் ஏழரை நாட்டு சனி மகரம், கும்பம் மற்றும் தனுசு ஆகிய 3 ராசிகளிலும், சனி திசை மிதுனம் மற்றும் துலா ராசி ஆகிய இரண்டிலும் நடக்கிறது. ஜனவரி 17, 2023 வரை சனி திசை தாக்கம் இருக்கும். பிறகு சனிபகவான் கும்ப ராசியில் நுழைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கும் சனி திசையின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News