Saturn Transit: சனியின் அதிசார சஞ்சாரத்துக்கு முடிவு! மகரத்தில் வக்ரமாகும் சனீஸ்வரர்

Sani Transit Predictions Good Bad Moderate: அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த சனீஸ்வரர் மீண்டும் மகர ராசிக்கு திரும்பினாலும், அவர் அக்டோபர் 23ம் தேதி வரை சனி பகவான வக்ர நிலையிலேயே மகர ராசியில் சஞ்சரிப்பார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 17, 2023, 08:17 AM IST
  • அதிசார சஞ்சாரத்தை இன்றுடன் முடித்துக் கொள்கிறார் சனீஸ்வரர்
  • மீண்டும் மகர ராசிக்கு திரும்பி வந்து நிலை கொள்வார் சனி பகவான்
  • அக்டோபர் 23ம் தேதி வரை மகர ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிப்பார் சனீஸ்வரர்
Saturn Transit: சனியின் அதிசார சஞ்சாரத்துக்கு முடிவு! மகரத்தில் வக்ரமாகும் சனீஸ்வரர் title=

Shani Gochar 2023: இன்று, 2023 ஜனவரி 17ம் தேதி செவ்வாய் கிழமை, சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு முறைப்படி பெயர்ச்சி ஆக உள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக, அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த சனீஸ்வரர் மீண்டும் மகர ராசிக்கு திரும்பினாலும், அவர் அக்டோபர் 23ம் தேதி வரை சனி பகவான வக்ர நிலையிலேயே மகர ராசியில் சஞ்சரிப்பார். அக்டோபர் 23ம் தேதிக்கு பிறகு, தனது பாதையை மாற்றி கடிகார சுற்றில் அதாவது நேர் திசையில் நகரத் தொடங்குவார்.

சனிப் பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்
தனுசு - ஏழரை சனி முடிவு
மிதுனம் - அஷ்டம சனி முடிவு
ரிஷபம், கன்னி ராசிக்கு நற்பலன்கள் கிடைக்கும்

கும்ப ராசியில் சனி
சனி பெயர்ச்சியின் காரணமாக ஏழரை சனியிலிருந்து விடுதலை பெற்று மிக சிறப்பான பலன்கள் பெறக்கூடிய ராசியில் தனுசு ராசி முக்கியமானது. 

மிதுன ராசி
இத்தனை காலமாக சனியின் பிடியில் சிக்கி நிம்மதி இழந்து தவித்துவந்த மிதுன ராசியினரருக்கு இனி நல்ல காலம் தான்.  

ரிஷபம், கன்னி ராசியினருக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இனி அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும்..

மேலும் படிக்க | ஏழரை சனி ஜென்மச் சனி காலகட்டத்தை இலகுவாக கடக்க உதவும் சனி தோஷ பரிகாரங்கள்

சனி பெயர்ச்சி 2023 ​மத்திம பலனை அனுபவைக்கப் போகும் ராசிகள்
சனி பெயர்ச்சியின் காரணமாக, மீன ராசியினருக்கு ஏழரை சனி தொடங்க உள்ளது. அதே போல மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவானால், கும்ப ராசியினர் மிக மிக மோசமான பலன்களைப் பெறுவார்கள். மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு பாதச் சனி தொடங்கும். அஷ்டம சனி தொடங்க உள்ள கடக ராசியினரும், அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்க உள்ள விருச்சிக ராசியினரும் கவனமாக இருப்பது நல்லது.

2023 ஜனவரி 17 சனிப் பெயர்ச்சியால் மோசமான பலன் பெற உள்ள ராசிகள்
மீனம் - ஏழரை சனி தொடக்கம்
கும்பம் - ஜென்ம ராசியில் சனி சஞ்சாரம்
கடக ராசி - அஷ்டம சனி
விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனி
சிம்மம் - கண்ட சனி ஆரம்பம்

சனி பகவான் தரும் நற்பலன்கள்
சனி பகவான், தண்டனை கொடுத்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் கொடுக்கும் ஆசான் என்று கருதப்படுகிறார். ஏழரை ஆந்த், சனியின் பிடியில் இருந்து வந்தவர்களுக்கு, வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.
சனியின் பாதிப்பு குறையும் போது, வேலை, தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகி அற்புத பலனைப் பெற்றிட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபமும், ஆரோக்கியமும் மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News