Vastu: வீட்டில் பணத்தை அள்ளிக் குவிக்கும் சீன வாஸ்து! ஆமையின் வாயில் காசு அதிர்ஷ்டத்தைக் கொட்டும்!

Feng Shui And Money Vastu :  வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும் என்பதால், சீனாவின் பிரபலமான வாஸ்து முறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 15, 2024, 05:20 PM IST
  • பணவரவுக்கு ஐடியா சொல்லும் வாஸ்து
  • சீன வாஸ்துப்படி பண வரத்துக்கு வழிகள்
  • தவளையை எப்படி வைத்தால் பணம் கிடைக்கும்?
Vastu: வீட்டில் பணத்தை அள்ளிக் குவிக்கும் சீன வாஸ்து! ஆமையின் வாயில் காசு அதிர்ஷ்டத்தைக் கொட்டும்! title=

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நம்பிக்கை வழிமுறைகள் ஆகும். வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளவர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் என்பது இந்திய நம்பிக்கை, அதேப் போல, சீனாவின் வாஸ்துவான ஃபெங் சூயி நம்பிக்கையின்படி, வீட்டில் வைக்கும் பொருட்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

அதிலும், வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும் என்பதால், உலகம் முழுவதும் ஃபெங் சூயி வாஸ்து பொருட்கள் பிரபலமாக உள்ளன. எந்த பொருளை வீட்டில் வைத்திருந்தால், செல்வச் செழிப்பு அதிகரிக்கும் என்று தெரிந்துக் கொள்வோம். , தொழிலில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

இந்திய நம்பிக்கை பஞ்சபூதங்கள்

இந்தியாவில் நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகியவை ஐம்பெரும் பூதங்களாக கருதப்பட்டு, அவற்றுக்கு தெய்வங்களையும் உருவகப்படுத்தி வழிபாடுகள் செய்யப்படுகின்ரன. அதேபோல, ஃபெங் சூயி சாஸ்திரத்திலும் ஐந்து கூறுகள் அடிப்படையாக உள்ளன.

அவை, பூமி, உலோகம், காற்று, நீர் மற்றும் நெருப்பு ஆகியவை ஆகும். உங்கள் வீட்டில் ஃபெங் ஷுய் வாஸ்துவை பயன்படுத்தினால், இந்த ஐந்து கூறுகளும் சமநிலைப்படும்.

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர வாழ்க்கை, சுப யோகம் ஆரம்பம்

ஃபெங் சுய் டிப்ஸ்

நிதி நிலையை வலுப்படுத்த ஃபெங் சுய் உதவுகிறது. மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கும் ஃபெங் ஷுய் குறிப்புகள் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். சிரிக்கும் புத்தர், மீன், மூங்கில் மரம், கிரிஸ்டல் ட்ரீ, வாயில் நாணயம் வைத்திருக்கும் தவளை என சீன வாஸ்து பரிந்துரைக்கும் பொருட்கள் இன்று இந்தியாவிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதிலும், வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு மற்றும் தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றத்தை விரும்புபவர்கள், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கின்றனர். ஆனால், பலரிடம் பணம் இருக்கிறது சந்தோஷம் இல்லை என்பது சிலருக்கு தான் பொருத்தமானது.

பண வரவுக்கு தவளை 

குடும்பத்திற்கு ஆபத்து மற்றும் துரதிர்ஷ்டம் வராமல் தடுக்க, தவளைகள் வீட்டின் பின்புறத்தில் வாழ வேண்டும் என்பது சீனாவில் நிலவும் ஒரு நம்பிக்கை. முன்காலத்தில், வீடுகளுக்கு பின்புறம் நீர்நிலைகள் இருக்கும், அங்கு தவளைகள் வசிப்பது சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டதால், பென் சூயி தவளைகள் விற்கப்படுகின்றன.

வாயில் நாணயத்துடன் தவளை

வாயில் நாணயத்துடன் இருக்கும் தவளையை வீட்டில் வைத்திருப்பது வீட்டிற்கு அசுபத்தைக் கொண்டுவராது, சுபமானது என்றும், பண வரவுக்கு தவளையின் வாயில் உள்ள நாணயம் உதவும் என்பது சீன வாஸ்துவின் நம்பிக்கை.

தவளையின் வாயில் உள்ள நாணயம், வீடு அல்லது அலுவலகத்தின் வெளிப்புறத்தை பார்த்தது போல் வைப்பது நல்லது. இது பணவரத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.  

வாயில் நாணயம் வைக்கப்பட்டிருக்கும் தவளை உருவ சிலைகளை வீட்டில் சோபாவின் அடியிலும் அலமாரியிலும் வைக்கலாம், இந்த சிலை வேறு யாருடைய கண்களுக்கும் தெரியாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் அதை தவறுதலாகக் கூட பூஜையறை, கழிவறை, படுக்கையறை மற்றும் சமையலறையில் வைக்கக்கூடாது. ஏனென்றால் இதனால் பலன் கிடைக்காது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இவைதான் குபேரருக்கு பிடித்த ராசிகள்: வாழ்நாள் முழுதும் கோடிகளில் புழக்கம், கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News