Amavasya June 2022 : ஆனி மாத அமாவாசை தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்று ஆனி மாத அமாவாசை தினத்தையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் கூடியிருந்தனர். தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் அமைத்து தர்ப்பணம் செய்தனர்.
மேலும் படிக்க | 2022 ஏழாம் மாதமான ஜூலை மாத எண் கணித பலன்: 7ம் எண்ணுக்கு ஏழரை இல்லை
இதனால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவித்து இருக்கின்றனர். பின்னர் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.
மேலும் படிக்க | Budhan Peyarchi 2022 Palangal: புதன் பெயர்ச்சியால் கோடீஸ்வரயோகம் கிடைக்கும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR