Saturn Transit 2025: மார்ச் 29, 2025 அன்று, சனி கும்பத்தை விட்டு வெளியேறி, குரு பகவானின் ராசியான மீனத்தில் நுழைவார். சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
புத்தாண்டில் பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றங்களும் இருக்கும். இதில் சனி பெயர்ச்ச மிக முக்கியமானதாக நிகழ்வாக இருக்கப் போகிறது. இந்நிலையில், 12 ராசிக்காரர்களும் நற்பலனை அடைய புத்தாண்டில் சனிபகவானை மகிழ்விக்க செய்ய வேண்டிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களாக இருந்தால், சனிபகவானை மகிழ்விக்க, ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஹனுமன் கோயிலுக்கு சென்று வழிபடவும், ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வதும் பலன் தரும்.
ரிஷபம் ராசிக்காரர்களாக இருந்தால், சனிபகவானை மகிழ்விக்க, துர்கா சப்தசதியை பாராயணம் செய்வது பலன் தரும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதும், சனி பகவானை குளிர்விக்கும்.
மிதுன ராசிக்காரர்களாக இருந்தால், சனி பகவானை மகிழ்விக்க எறும்புகள் மற்றும் காகங்களுக்கு உணவளிக்க வேண்டும்.
கடக ராசிக்காரர்களாக இருந்தால், சனிபகவானை மகிழ்விக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவலிங்கத்தின் மீது பூக்கள் அல்லது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, சங்கரரின் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
சிம்ம ராசிக்காரர்களாக இருந்தால், சனிபகவானை மகிழ்விக்க உங்கள் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களின் ஆசியைப் பெற வேண்டும். ஒவ்வொரு அமாவாசையிலும் தனது குலதெய்வ கோயிலில் அன்னதானம் செய்ய வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களாக இருந்தால், சனி பகவானை மகிழ்விக்க, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பசுவிற்கு தீவனம் கொடுக்க வேண்டும்.
துலாம் ராசிக்காரர்களாக இருந்தால், சனி தேவரைப் திருப்திபடுத்த, ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இது தவிர மருத்துவமனைக்குச் சென்று போர்வைகளை தானமாக வழங்க வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்களாக இருந்தால் ஆற்றங்கரைக்குச் சென்று சனிபகவானுக்கு பூஜை செய்து மீன்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
தனுசு ராசிக்காரர்களாக இருந்தால், ஒவ்வொரு வியாழக்கிழமையும் கோவிலை சுத்தம் செய்து, கோவிலில் அன்னதானம் செய்ய வேண்டும்.
மகர ராசிக்காரர்களாக இருந்தால், ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.
கும்ப ராசிக்காரர்களாக இருந்தால், சனி பகவானை மகிழ்விக்க, ஏழை எளியவர்களுக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள்.
மீன ராசிக்காரர்களாக இருந்தால், சனிபகவானை மகிழ்விக்க, சனிக்கிழமையன்று விரதம் இருந்து, அன்றைய தினம் காகம், கருப்பு நிற பசு அல்லது கருப்பு நாய்க்கு உணவளிக்கவும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.