Navratri 2023: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான சைத்ரா நவராத்திரி இந்த ஆண்டு மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்த பண்டிகை காலத்தில் பல்வேறு இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா தேவியின் சிலைகள் வைக்கப்பட்டு, 9 நாட்கள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழா நாட்களில் மக்கள் விரதமிருந்து உணவருந்தாமல் இருப்பார்கள். விரத முறை அனைவருக்கும் வித்தியாசமாக இருந்தாலும் சாதாரண நாட்களைப் போலவே, இந்த 9 நாட்களிலும் மக்கள் உணவை உட்கொள்கிறார்கள். துர்கா தேவியை மகிழ்விக்க இந்த 9 நாள் விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள் விரதத்திற்கு முன்னரே உடலை தயார்படுத்தி கொள்ள வேண்டும். விரதத்திற்கு முன், இந்த நேரத்திற்கு உங்கள் மனதை தயார்படுத்துவது முக்கியம். விரதம் இருக்க பல வழிகள் உள்ளன, சிலர் ஒரு நாள் அல்லது அதற்கு மேல் எதையும் சாப்பிடாமல் அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
விரதம் இருக்க தொடங்குவதற்கு சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு முன்பு உணவு மற்றும் பானங்களை படிப்படியாக குறைக்க தொடங்குவது நல்லது. இப்படி செய்யாமல் திடீரென்று விரதத்தை மேற்கொண்டால் அது உங்கள் உடலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். சர்க்கரை உட்கொள்ளலை குறைவாக வைத்திக்க வேண்டும். விரதம் இருப்பதற்கு முன் குக்கீஸ்கள் மற்றும் இனிப்பு கலந்த தேநீர் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. இது உங்களை திருப்தியாக உணர வைக்கலாம், ஆனால் உங்கள் இரத்த சர்க்கரை ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து குறையும் போது, நீங்கள் மிகவும் பசியாகவும் பலவீனமாகவும் இருக்கலாம். நீண்ட காலத்திற்கு போதுமான ஆற்றலைப் பராமரிக்க, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதத்தை சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் அல்லது பானங்கள் எதுவும் குடிக்காமல் இருக்கும்போது கடுமையான உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த சமயத்தில் லேசான உடற்பயிற்சி செய்வது நல்லது.
நாள்பட்ட நோய் இருந்தால், விரதத்தைத் தொடங்குவதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. ஏனெனில் விரதத்தின் போது மருந்துகளை முற்றிலுமாக நிறுத்துவது உங்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். பொதுவாக விரதம் இருப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துதல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் ஆற்றலை சமநிலைப்படுத்துதல் போன்ற பல நன்மைகளை பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ