எந்த ராசிக்கு என்ன நட்சத்திரம்? 27 நட்சத்திரங்களின் அதிபதிகள்! எமனின் நட்சத்திரம் எது?

Nakshatram - Adhibdhi : ராசி முக்கியமா? நட்சத்திரமா? இரண்டும் இல்லைன்னா நவகிரகங்களா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்வோம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2024, 03:52 PM IST
  • எந்த நட்சத்திரத்தின் அதிபதி எமன்?
  • நட்சத்திரங்களும் அவற்றின் அதிபதிகளும்
  • ஜோதிடத்தில் நட்சத்திரங்களின் முக்கியத்துவம்
எந்த ராசிக்கு என்ன நட்சத்திரம்? 27 நட்சத்திரங்களின் அதிபதிகள்! எமனின் நட்சத்திரம் எது? title=

ஜோதிடம் என்றால், அதில் ராசிபலன் என்ற வார்த்தை அனைவரும் அடிக்கடி கேட்பது. ராசி மட்டுமல்ல, ஜோதிடத்தில், நட்சத்திரம், நாள், கோள் என பல விஷயங்கல் மிகவும் முக்கியமானவை. உண்மையில் கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என்பது பலருக்குத் தெரியாது. ஒருவருடைய ஜாதகம் என்பது அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. 

ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் உண்டு.  நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய 9 கோள்களும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளையும் ஆள்கின்றன. 

ஒரு ராசிக்கு இரண்டே கால் நட்சத்திரம் என 12 ராசிகளுக்கும் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்திற்கு ஏற்ப ராசியை கணித்து ராசிபலன்கள் கூறப்படுகின்றன. ஒருவர் பிறந்த நட்சத்திரன் ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன. 

மேலும் படிக்க |  ஆவணியை முடித்து வைத்து புராட்டாசியை வரவேற்கும் வார ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி?

இராகு 

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் அதிபதி ராகு பகவான் ஆவார். நிழல் கிரகங்களில் ஒருவரான அவர்,  மனதில் ஆசைகளை தோற்றுவிப்பவர்.

கேது

இதன்படி பார்த்தால், அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் அதிபதி கேது பகவான் ஆவார். நிழல் கிரகங்களில் ஒருவரான அவர், அறிவுக்கு அதிபதி. மனதில் தோன்றும் ஆசைகளுக்கு கடிவாளம் போட்டு ஒருவரை வழிநடத்தும் கேது பகவானின் ஆட்சிக்கு உட்பட்டவை தான் இந்த மூன்று நட்சத்திரங்களும்.

சுக்கிரன்

பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் அதிபதி சுக்கிரன் ஆவார். ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி செல்வம் செல்வாக்குக்கு காரணமான சுக்கிர பகவானின் ஆட்சிக்கு உட்பட்டவை தான் இந்த மூன்று நட்சத்திரங்களும்.

மேலும் படிக்க | கன்னியில் அஸ்தமாகும் புதன் மகிழ்ச்சியையும் அஸ்தமாக்கிவிடுவார்! உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்!

சூரியன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் என மூன்று நட்சத்திரங்களின் அதிபதி சூரிய பகவான் ஆவார்.  

சந்திரன் 

ரோகிணி, அஸ்தம், திருவோணம் என மூன்று நட்சத்திரங்களின் அதிபதி சந்திரன் ஆவார்.  

செவ்வாய்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். 

குரு

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களின் அதிபதி சூரிய பகவான் ஆவார்.  

சனி

பூசம், அனுடம், உத்திரட்டாதி என மூன்று நட்சத்திரங்களின் அதிபதி சூரிய பகவான் ஆவார்.  

அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ப நவகிரகங்களை வழிபட்டால், வாழ்வில் வளம் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த ஆண்டு பிள்ளையார் சுழி போட்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன் செய்யும் நேரம் எப்போது? கணபதியை கரைப்போம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News