இந்து சமய வழிப்பாட்டில பாம்புக்கும் முக்கிய இடம் உண்டு. காக்கு கடவுள் விஷ்ணு பாம்பையே பஞ்சனையாகக் கொண்டவர் என்றால், சிவபெருமானோ கழுத்தில் பாம்பை ஆபரணமாக அணிந்திருக்கிறார். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க முயன்றபோது, மந்தார மலையை வைத்து அமிர்தம் கடையவும், கயிறாக வாசுகி என்னும் பாம்பையும் பயன்படுத்தினார்கள்.
ஆடி மாதத்தில், பாம்புப் புற்றுக்கு பால் விடுதலும், நாகத்திற்கு பூஜை செய்வதும் குடும்பத்திற்கு நல்லது என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இந்தியாவின் பல பாகங்களிலும் பாம்பை வழிபடும் வழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் நாக பஞ்சமி, வளர்பிறை பஞ்சமியில் நாளில் கொண்டாடப்படுகிறது.
நாகர்கள்
நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.
காலசர்ப்ப தோஷ நிவாரணம்
சிவன் கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் நாக பஞ்சமி வழிபாடும், புற்றுக்கு பால் விடுவதும் காலசர்ப்ப தோஷத்தை நீக்குவதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 3:14 மணி வரை பஞ்சமி திதி இருக்கிறது. திதி இரவில் இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளும் வழக்கப்படி குரோதி ஆண்டில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நாக பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது.
தெய்வங்களும் நாகமும்
விஷ்ணு பகவான் படுக்கும்போது படுக்கையாகவும், அவர் அமரும்போது சிம்மாசனமாகவும், நின்றால் குடையாகவும், நடந்தால் அவரது நிழலாய் கூடவே இருப்பது அனந்தன் என்ற பாம்பு. தேபோல, விநாயகருக்கு இடுப்பில் அரைஞாண் கயிறாக பாம்பு இருந்தால், முருகனுக்கு வாகனமான மயிலின் கால்கலுக்கு இடையே பாம்பு இருப்பதைப் பார்க்கலாம். இவ்வாறு தெய்வங்களின் உடலை ஒட்டியே நாகங்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாக பஞ்சமி வழிபாடு
நாக பஞ்சமி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி சூரியனை வணங்கிவிட்டு, வீட்டை சுத்தப்படுத்தவும். நாக பஞ்சமிக்கு விரதம் இருக்கும் வழக்கமும் சில குடும்பங்களில் உண்டு. கோவிலுக்கு சென்று, பாம்பு புற்றுக்கு பால் வார்த்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காலசர்ப்ப தோஷம், தெரிந்தும் தெரியாமலும் நாகத்திற்கு செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ராகு கால பூஜை
ராகு காலத்தில் நாகருக்கு பூஜை செய்வதும் பால் ஊற்றுவதும் விஷேசமானது. சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக, விபூதி போல அணிந்து கொள்ள வேண்டும். நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும், புத்திர தோஷம் விலகும்.
மேலும் படிக்க | நாளும் கோளும் வாழ்க்கையை மாற்றியமைக்கும்! எதிர்வரும் வாரத்திற்கான ராசிபலன்!
சகோதரர்களுக்காக நாக பஞ்சமி விரதம்
நாக பஞ்சமி விரதத்தை சகோதரிகள், தங்கள் சகோதரர்களுக்காக இருப்பது வழக்கம். இதற்கு ஒரு தொன்மமான கதை உண்டு. ஒரு பெண் தனது சகோதரர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும்போது, வானத்தில் சென்றுக் கொண்டிருந்த கருடனின் வாயில் கவ்வப்பட்டிருந்த பாம்பின் விஷம் உணவில் விழுந்துவிட்டது.
மாண்டவரை மீண்டவராக்கிய தங்கை
உணவில் ஒரு சொட்டு விஷம் கலந்தது தெரியாமல் உணவை உண்ட ஏழு சகோதரர்களும் இறந்துவிட்டனர். தவித்துப்போய் கதறி அழுத பெண்ணின் நிலையைப் பார்த்த சிவபெருமான் நாகப் பஞ்சமி விரதம் இருக்கச் சொன்னார். சிவனின் வாக்கின்படி, சகோதரி தனது சகோதரர்கள் எழுவரின் உயிரை திரும்பப்பெற விரதம் இருந்தாள். முறைப்படி விரதம் இருந்ததால், மாண்டவர் மீண்டு வர, நாக பஞ்சமி விரதம் பிரபலமானது. சகோதரர்களின் நலனுக்காக சகோதரிகள் விரதம் இருக்கும் வழமையும் தொடங்கியது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ