இன்னும் 25 நாட்களில் சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டும்

Saturn Nakshatra Transit 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் இன்னும் 25 நாட்களில் நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 13, 2024, 05:01 PM IST
  • இன்னும் 25 நாட்களில் சனி நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார்.
  • கூட்டுதொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
  • வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இன்னும் 25 நாட்களில் சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டும் title=

சனி நட்சத்திர பெயர்ச்சி பலன்கள் 2024: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பலவான். இவர் நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன் தரக்கூடியவர். சனி பகவான் நவக்கிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 07 ஆம் தேதி அதாவது இன்னும் 25 நாட்களில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் அதாவது குரு அதிபதி நட்சத்திரத்தில் பயணிக்கயுள்ளார். சனி பகவான் குரு பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அனைத்து ராசிகளிலுமே இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் சுபமாகவே தெரியும். எனினும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதனுடன் நல்ல பண வரவு, வேலையில் ப்ரமோஷன், சம்பள உயர்வு, குழந்தை பாக்கியம் உண்டாகும். எனவே சனி நட்சத்திர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும் என்று பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் லாபகரமான பலனைத் தரும். நிதி நிலை மேம்படும், இதனால் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்தியைப் பெறலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய முதலீடு மூலம் நல்ல லாபம் பெறலாம். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும் மற்றும் அவருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள்.

மேலும் படிக்க | Sun Transit 2024 : மீனத்தில் சூரியன்: நாளை முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம், வாழ்க்கை ஜொலிக்கும்

ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி (Saturn Nakshatra Transit 2024) மிகவும் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வேலை வாய்ப்பை பெறலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வீடு, வாகனம் வாங்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். கூட்டுதொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் மங்களம் உண்டாகும். ஏப்ரல் மாதம் முதல் அதிர்ஷ்டம் பெருகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி மழை கொட்டும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களை மாணவர்கள் பெறலாம். உடன் வேலை செய்வோரிடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சனி பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

 மேலும் படிக்க | Shani Uday 2024: இன்னும் 5 நாட்களில் சனி உதயம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News