கும்பத்தில் சூரியன்: இந்த ராசிகள் மீது பண மழை... செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

Sun Transit: 4 ராசிகளுக்கு சூரியன் பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர உள்ளது. இவர்களுக்கு இந்த காலத்தில் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2024, 03:39 PM IST
  • மகர ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி தன லாபத்தை மீண்டும் அதிகரிக்கும்.
  • இந்த காலத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும்.
  • குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பத்தில் சூரியன்: இந்த ராசிகள் மீது பண மழை... செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் title=

Sun Transit: ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசிகளையும் இயக்கங்களையும் நிலைகளையும் மாற்றுகின்றன. கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். இது சங்கராந்தி என்று அழைக்கப்படுகின்றது.

இந்த மாதம் 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இப்போது அவர் மகர ராசியில் இருக்கிறார். கும்ப ராசியில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இதனால் நற்பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் கிடைக்கும். எனினும் 4 ராசிகளுக்கு சூரியன் பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர உள்ளது. இவர்களுக்கு இந்த காலத்தில் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries) 

சூரியனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை கொண்டு வரும். பணியிடத்திலும் வணிகத்திலும் உங்கள் நிலைமை மேன்மை அடையும். நீங்கள் ஏதாவது சட்ட சிக்கலில் சிக்கிருந்தால் அது இப்போது உங்களுக்கு சாதகமாக முடியும். மாணவர்களுக்கு அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி கிடைக்கும். படிப்பில் நாட்டம் அதிகமாகும். முன்னர் செய்த முதலீடுகளின் பலன் இப்போது உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு முன்பை விட வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | மார்ச் மாதம் சுக்கிரன் உச்சம்.. இந்த 5 ராசிகளுக்கு ராஜ கோடீஸ்வர வாழ்க்கை

சிம்மம் (Leo)

அலுவலகப் பணிகளில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்போது அதை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரும். குழந்தைகள் தொடர்பாக இருந்து வந்த ஒரு மிகப்பெரிய மனக்கவலை இப்போது சரியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். 

துலாம் (Libra)

நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த ஒரு காரியம் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். வேலை தேடிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றியை பெறுவார்கள். கடன் தொல்லை நீங்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். 

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி தன லாபத்தை மீண்டும் அதிகரிக்கும். இந்த காலத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | செவ்வாய் புதன் சேர்க்கையால் செழிக்கப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News