சூரிய கிரகணம் 2022: ஆண்டின் கடைசி கிரகண சமயத்தில் இதை மட்டும் செய்ய வேண்டாம்

Surya Grahan 2022: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று... இந்த நாளில் என்ன செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை விட, எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 25, 2022, 06:16 AM IST
  • மாலை 3.45 மணி முதல் 6 மணி வரை எச்சரிக்கையாக இருக்கவும்
  • கிரகணத்திற்கு பிறகு குளித்து, வீட்டை சுத்தம் செய்யவும்
  • மாலை 6 மணிக்கு மேல் வழிபாடுகளை செய்யவும்
சூரிய கிரகணம் 2022: ஆண்டின் கடைசி கிரகண சமயத்தில் இதை மட்டும் செய்ய வேண்டாம் title=

சூரிய கிரகணம் 2022: இன்று ஐப்பசி மாத அமாவாசை. தீபாபளி பண்டிகை கொண்டாடப்படும் அமாவாசை நாளான இன்று ஏற்படும் சூரிய கிரகணம் இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் ஆகும்.  இந்த சூரிய கிரகணம் சுவாதி நட்சத்திரம் மற்றும் துலாம் ராசியில் நிகழவிருக்கிறது. இந்த ஆண்டு, இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் நிகழ்கிறது. முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதத்தில் இருந்தது. தற்போது, இரண்டாவது முறையாக கிரகணம் ஏற்படவுள்ளது. இன்றைய சூரிய கிரகணம் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தெரியும். இது தவிர ஐரோப்பிய நாடுகள், வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளிலும் தெரியும். இந்த நாளில் என்ன செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை விட, எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது, சூரியனின் ஒளி பூமியை சென்று அடைய முடியாத நிலை ஏற்படும். அந்த வானியல் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமான இன்று, தீபாவளி பண்டிகை நாளாக இருந்தாலும், கோவில்கள் மூன்றரை மணி நேரம் மூடப்பட்டிருக்கும். அனைத்து இந்து கோவில்களிலும், மாலை 3.45 மணி முதல் 6 மணி வரை ஆலயக் கதவுகள் மூடியிருக்கும்.

தீபாவளிக்குப் பிறகு, செவ்வாய்கிழமை, ஐப்பசி மாத சுக்ல பட்சத் திதியில் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அந்த சமயத்தில் ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும். மாலை 6 மணிக்கு மேல் ஆலயம் சுத்தப்படுத்தப்பட்டு, சம்பிரதாய முறைப்படிபூஜைகள் நடைபெற்ற பிறகு ஆலயங்களில் வழிபாடு வழக்கம் போல தொடங்கும்.  

மேலும் படிக்க | நாடு முழுவதும் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம்: களைகட்டும் தீப ஒளியின் குதூகலம் 

கிரகண காலத்தில் இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ, சூதக் காலத்தில் உணவு உண்ணக்கூடாது. உணவு உண்டால் அது செரிமாண கோளாறுகளை ஏற்படுத்தும். கிரகண காலத்தில் இலைகள், மரம், பூக்கள் ஆகியவற்றை பறிக்கக்கூடாது. கிரகணத்தின் போது முடியை வெட்டக்கூடாது.

கிரகண நேரத்தில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் தூங்குவது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். கிரகண முக்திக்குப் பிறகு, அதாவது, கிரகணம் முடிந்த பிறகு, புனிதமான ஏரி, குளம், கங்கை அல்லது வேறு ஏதேனும் புண்ணிய நதியில் நீராடி, முடிந்தவரை தானங்கள் கொடுக்க வேண்டும். இதனால் வீட்டில் செழிப்பு உண்டாகும்.

கிரகணத்தின் போது எந்த சுப காரியங்களையும் செய்யக்கூடாது, புதிய வேலைகள் தொடங்கக்கூடாது. கிரகணம் முடிந்த பிறகு, புதிதாக உணவு சமைத்து சாப்பிடுவது நல்லது. சமைத்த உணவு இருந்தால், அதில் தர்ப்பை அல்லது துளசி இலைகள் போட்டு வைக்கவும். கிரகண காலத்தில் குலதெய்வத்தை நினைத்து மந்திரம் ஜபிப்பது நன்மை தரும்.

மேலும் படிக்க | சனீஸ்வரரால் பிரச்சனை முடிந்தாலும் சிக்கலைக் கொடுக்க தயாராகிவிட்டார் புதன்

கர்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை

 

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது புராதன நம்பிக்கை ஆகும். கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். பயணம் செய்வதைத் தவிர்க்கவும். கிரகணத்தின் கதிர்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருப்பது மிகவும் நல்லது.

கிரகணம் முடிந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்து, குளித்து விட்டு, பூஜைகளை செய்ய வேண்டும். ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும்.

மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News