இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை ஆரம்பம்: பெயர்ச்சியாகிறார் சுக்கிரன்

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் மிக அதிகமான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2024, 08:41 AM IST
  • மீன ராசியில்தான் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது.
  • ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
  • மீன ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை ஆரம்பம்: பெயர்ச்சியாகிறார் சுக்கிரன் title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் பெயர்ச்சி, அதாவது ராசியில் ஏற்படும் மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சிகள் மக்களின் வாழ்வில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயச்சி, வக்ர நிவர்த்தி என இவை அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

பேச்சாற்றல், திருமண வாழ்க்கை, வசதி, செழுமை, உலக இன்பம், கலை, அழகு, குழந்தைகள், பணம், ஈர்ப்பு, ஆடம்பரம், அன்பு, பெருமை, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் சுக்கிரன். ஒருவருடைய ஜாதகத்தில் மிக நீண்ட மகாதசை சுக்கிரனுடையது. சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் வலுப்பெற்று இருந்தால், அந்த நபருக்கு குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும் என கூறப்படுகின்றது. சுக்கிரன் மார்ச் 31, 2024 அன்று, தான் உச்சம் பெற்றுள்ள ராசியான மீனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த மாற்றம் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றாது. ஏப்ரல் 24 வரை அவர் மீன ராசியில் இருப்பார்.

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் மிக அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களை இத்தனை நாட்களாக வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் இப்போது தீர்ந்துபோகும். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடகம் (Cancer): 

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல வித நல்ல வாய்ப்புகளை கொண்டு வரும். பணி இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேல் அதிகாரிகள் மற்றும் உடல் பணிபுரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். 

துலாம் (Libra) 

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி அதிகப்படியான பலன்களை அளிக்கும். அலுவலக பணிகளில் இருப்பவ்ரகளுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டு இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். 

மேலும் படிக்க | மே 1 முதல் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கும்

விருச்சிகம் (Scorpio):

சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபச்செலவுகள் இருக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

மீனம் (Pisces): 

மீன ராசியில்தான் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும். மீன ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மீன ராசிக்கார்ரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரம் மீன ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். செல்வச் செழிப்பு, பொருள் மகிழ்ச்சி மற்றும் இன்பம் ஆகியவற்றைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நேரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News