செவ்வாய் - புதன் பெயர்ச்சியினால் குபேரனின் ஆசியை முழுமையாகப் பெறும் 4 ராசிகள்

Mars- Mercury Transit: அடுத்த 6 நாட்களுக்குள், 2 முக்கியமான கிரகங்களான செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் தங்கள் சொந்த ராசிக்குள் நுழைவதால் இந்த ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது. செவ்வாய், புதன் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 26, 2022, 02:54 PM IST
  • கல்வியுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • பணியில் மேலதிபாரி உங்களை பாராட்டுவார்கள்.
செவ்வாய் - புதன் பெயர்ச்சியினால் குபேரனின் ஆசியை முழுமையாகப் பெறும் 4 ராசிகள் title=

Mars- Mercury Transit: அடுத்த 6 நாட்களுக்குள், 2 முக்கியமான கிரகங்களான செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி  நடக்க போகிறது. இரண்டு கிரகங்களும் தங்கள் சொந்த ராசிக்குள் நுழைவதால் இந்த ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது. செவ்வாய், புதன் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

ஜூன் 27ல் செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்குள் நுழைகிறது. 5 நாட்களுக்குப் பிறகு, ஜூலை 2 ஆம் தேதி, புதன் மிதுன ராசியில் நுழைவார். தைரியம், வீரம், திருமணம், சகோதரன், நிலம் - சொத்து போன்றவற்றை செவ்வாய் பாதிக்கிறது. மறுபுறம், புதன் கிரகம் புத்திசாலித்தனம், வணிகம், செல்வம், தர்க்கம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாகும்.

இந்த இரண்டு முக்கிய கிரகங்களும் ராசிகளில் நுழைவது அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், இந்த இரண்டு கிரக மாற்றங்களும் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் மற்றும் வலுவான பலன்களைத் தரும்.

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

செவ்வாய்-புதன் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் புதன் சஞ்சாரம் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணையின் உதவியால் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியம்  நிறைவேறும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பாத்து வந்த பணம் கிடைக்கும். கல்வியுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பல நன்மைகளைத் தரும். புதிய வேலை கிடைக்கலாம். உத்தியோகத்தில் சில மாறுதல்கள் ஏற்படலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணியில் மேலதிபாரி உங்களை பாராட்டுவார்கள். ஷாப்பிங் செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும்.

மேலும் படிக்க | Astro: ஜூன் கடைசி வாரத்தில் மகாலட்சுமியின் அருளை முழுமையாக பெற இருக்கும் ராசிகள்

விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு செவ்வாய்-புதன் பெயர்ச்சி சிறந்த பலன் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை நிலையை மேம்படுத்த நினைப்பார்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். முதலீடு செய்ய இது நல்ல நேரம்.

தனுசு: வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், இது தொழிலில் நன்மை தரும். தொழில்-வியாபாரம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். மத அல்லது ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News