செவ்வாய் தோஷம் என்றால் பலருக்கும் பயம் ஏற்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஜாதகம் எழுதும்போது, செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. ஜாதகத்தில் எந்தெந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷத்தை உண்டாக்கும்? செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படலாம்? செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு உண்டான பரிகாரங்கள் என்ன? இப்படி பல கேள்விகள் செவ்வாய் தோஷம் தொடர்பாக பேசும்போது எழுகிறது. பூர்வ ஜன்ம வினைகளும், பாவங்களும் தோஷங்களாக மாறுகின்றன. அதில் செவ்வாய் ஏற்படுத்தும் தோஷமும் ஒன்று.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தையின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும் நிலையை செவ்வாய் தோஷம் என்கிறோம்.
லக்னத்தில் இருந்து இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால், மற்றவர் மனத்தைப் புண்படுத்தும்படி பேசும் குணம் கொண்டவராக அந்த ஜாதகர் இருப்பார். அதனால் அவருக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் எழும். ஏனென்றால், தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாக திகழ்வது இரண்டாவது இடம். அதில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார்
நான்காம் இடத்தில் செவ்வாய் இருப்பவர்களுக்கு கடுமையான பிடிவாத குணம் இருக்கும். இதனால், எப்போதும் மற்றவர்களுடன் முரண்படுவதும், பிறரால் புறக்கணிப்படும் நிலையும் ஜாதகருக்கு ஏற்படும்.
ஒருவரின் லக்னத்தில் இருந்து ஏழாம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால், அவர் வாழ்க்கைத் துணையுடனும், நெருங்கியவர்களுடனும் எப்போதும் வாய்த்தகராறு செய்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக யாரும் இருக்க மாட்டார்கள், இவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது.
ஒருவரின் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருந்தால், எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திடீர் செலவுகளால் விரயம் ஆகிவிடும். வாழ்வில் நிலையான போக்கு இல்லாதவர்களாக இருப்பார்கள்.
மேலும் படிக்க | ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழ்ச்சியாக இருக்கப்போகும் 4 ராசிகள்
ஒருவரின் ஜாதகத்தில் 12ம் இடத்தில் செவ்வாய் இருந்தால், அவர்களுக்கு பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர் நன்மையே செய்தாலும் கெட்ட பெயர் வந்து சேரும்.
பொதுவாக, வட இந்திய ஜோதிடர்கள் செவ்வாய் தோஷத்தை மதிப்பிடும்போது ஜாதகத்தின் இரண்டாவது வீட்டைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் மாறுபடுவது போல, ஜோதிட கணிப்பு முறையும் தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் மாறுபாடாக உள்ளது.
ஆனால், சில ஜாதங்களில் செவ்வாய் தோஷம் இருந்தாலும், அவர்களின் ஜாதகத்தில் பிற கிரகங்களின் பல்வேறு சேர்க்கைகள் காரணமாக தோஷம் தானாகவே நிவர்த்தியாகிவிடுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ