சுக்கிரன் பெயர்ச்சி: வேலை, வியாபாரத்தில் அமோக வளர்ச்சி...துன்பங்கள் சுக்கு நூறாகும்!!

Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2023, 04:42 PM IST
  • அக்டோபரில் சிம்மத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
  • ஆசைகள் நிறைவேறும்.
  • தொழில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன.
சுக்கிரன் பெயர்ச்சி: வேலை, வியாபாரத்தில் அமோக வளர்ச்சி...துன்பங்கள் சுக்கு நூறாகும்!! title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், கிரகங்கள், ஜாதகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் யோகங்கள் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஒரு கிரகம் அதன் ராசி, நட்சத்திரம் மற்றும் நிலைகளை மாற்றினால் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கின்றது. 

சமீபத்தில், மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி, செல்வம் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். அடுத்ததாக சுக்கிரன் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிம்மம் மற்றும் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆவார். 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரன் அக்டோபர் 2 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து, தீபாவளிக்கு முன், நவம்பர் 3 ஆம் தேதி கன்னி ராசிக்கு அவர் மாறுகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் எதிர்காலம் ஜொலிக்கும்

ரிஷப ராசி:

அக்டோபரில் சுக்கிரன் சிம்மத்தில் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள காரியங்களிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசைகள் நிறைவேறும், நிதி நிலை மேம்படும்.

சிம்ம ராசி:

அக்டோபரில் சிம்மத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஆசைகள் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன. திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல செய்திகள் கிடைக்கலாம். சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி.. தீபாவளி முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

துலாம் ராசி:

சுக்கிரன் துலாம் ராசியை ஆளும் கிரகம் என்பதால், ரிஷபம் போலவே, துலாம் ராசிக்காரர்களும் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும், வருமானம் கூடும். தொழிலதிபர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடும். அதிக லாபம் பெறலாம்.எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும்.

விருச்சிக ராசி: 

நவம்பரில் சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு நல்ல காலமாக இது இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும், திருமணம் இப்போது கைகூடும்.

தனுசு ராசி: 

நவம்பரில் கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு நல்ல நேரமாக இது இருக்கும். நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் உயரும் வலுவான வாய்ப்புகள் இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

மகர ராசி: 

நவம்பர் 4-ம் தேதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். நவம்பர் 3-ம் தேதி சுக்கிரன் ராசி மாறி கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். இது போன்ற சூழ்நிலையில் மகர ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியில் அபரிமிதமான அதிகரிப்பு ஏற்படும். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

மேலும் படிக்க | குரு பகவானின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு 2024 ஜனவரி வரை அமோக வாழ்க்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News