நாலே நாள்ல பணம் வந்து கொட்டும்! இது சுக்கிரப் பெயர்ச்சியால் 4 ராசிகளின் அதிர்ஷ்ட சஞ்சாரம்!

Shukra Peyarchi June 12:  சுகமான வாழ்க்கையைத் தந்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் சுக்கிரன் பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2024, 07:29 PM IST
  • சுகமான வாழ்க்கையைத் தரும் சுக்கிரன்
  • சுக்கிரன் பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்
  • ஜூன் 12 சுக்கிரன் பெயர்ச்சி
நாலே நாள்ல பணம் வந்து கொட்டும்! இது சுக்கிரப் பெயர்ச்சியால் 4 ராசிகளின் அதிர்ஷ்ட சஞ்சாரம்! title=

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. கிரகங்களின் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் தெரியும். ஜூன் 12 ஆம் தேதி, சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்தப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு விசேஷமான நன்மைகளைக் கொடுக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

சுக்கிரனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் நேர்மறை மற்றும் பாதகமான பலன்களைத் தரப்போகிறது என்பதை தெரிந்துகொள்வோம். ஒருவைன் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், வாழ்க்கையில் தேவையான அனைத்து வளங்களும் கிடைத்து செழிப்புடன் வாழலாம். சுகமான வாழ்க்கையைத் தந்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் சுக்கிரன் பெயர்ச்சியால் சிலருக்கு நன்மை ஏற்படும்.

ஜூன் 12-ம் தேதி சுக்கிரன், ரிஷபம் ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இன்பம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகமான சுக்கிரன், அன்னை லட்சுமியின் கடாட்சம் பெற்றவர். லட்சுமி வழிபாடு, சுக்கிரனின் அருளையும் பெற்றுத் தரும்.  சுக்கிரனின் நிலை வலுவாக இருக்கும் நபர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தற்போதைய ஜூன் 12ம் தேதியன்று நடைபெறும்  சுக்கிரன் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். அந்த ராசிகள்...

மேலும் படிக்க | நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!

மேஷம் சுக்கிரன் பெயர்ச்சி நற்பலன்கள்

சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அனுகூலமான பலன்கள் கிடைக்கும் இந்த காலகட்டத்தில், தைரியம் மற்றும் பொறுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் பின்நோக்கி பார்க்க வேண்டிய அவசியமேஇருக்காது.

ரிஷபம் சுக்கிரன் பெயர்ச்சி நற்பலன்கள்

 சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த காலகட்டத்தில் சுப பலன்கள் கிடைக்கும், வசதிகள் அதிகரிக்கும். வாகனம், நிலம், புதிய வீடு வாங்கும் வாய்ப்புகளை ரிஷப ராசிக்கு கொடுக்கும் சுக்கிரன், லாபத்தைக் கொடுப்பார். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது லாபத்தைத் தரும்.

மிதுனம் சுக்கிரன் பெயர்ச்சி நற்பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம், பண வரவை அதிகப்படுத்தும். மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக காலமான இந்த சுக்கிர சஞ்சாரம், வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். காதலர்களுக்கு மிகவும் சாதகமான ஜூன் மாத சுக்கிரப் பெயர்ச்சியில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

மேலும் படிக்க | தேவர்களுக்கே குருவாக இருந்தாலும் 4 ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுக்கும் குரு உதயம்!

சிம்மம் சுக்கிரன் பெயர்ச்சி நற்பலன்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரனின் ஜூன் மாத பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அனைத்தும் வந்து மகிழ்ச்சி கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும் தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மொத்தத்தில், சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி நல்ல நேரமாக இருக்கும்.

துலாம் சுக்கிரன் பெயர்ச்சி நற்பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறும் துலாம் ராசிக்காரர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. வியாழக்கிழமையன்று குருவை வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு! சுக்கிரனும் மயங்கும் லட்சுமி பூஜை செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News