ஏப்ரலில் மிகப்பெரிய கிரக மாற்றங்கள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்

Lucky Zodiac Signs of April 2024: ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசியை மாற்ற உள்ளன? இதனால் ராசிகளில் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன? இதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 27, 2024, 04:12 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
  • பண வரவு அதிகமாக இருக்கும்.
  • இதனால் நிதிநிலை நன்றாக இருக்கும்.
ஏப்ரலில் மிகப்பெரிய கிரக மாற்றங்கள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான் title=

Lucky Zodiac Signs of April 2024: இன்னும் சில நாட்களில் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த மாதம் ஆன்மீக மற்றும் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான மாதமாக இருக்கும். ஏனெனில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. இது தவிர இந்த மாதத்தில் கிரகங்களின் உதய, அஸ்தமன மாற்றங்களும் இருக்கும். இவற்றின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். 

ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரிய பகவான் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது ராசியை (Zodiac Signs) மாற்றுகிறார். அதேபோல் செவ்வாயும் சுமார் ஒரு மாத காலத்துக்கு ஒருமுறை ராசி மற்றும் செய்கிறார். ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசியை மாற்ற உள்ளன? இதனால் ராசிகளில் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன? இதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஏப்ரல் 2024 கிரக மாற்றங்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில், ஏப்ரல் 2 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைவார். அதன் பிறகு ஏப்ரல் 9 ஆம் தேதி அவர் மீன ராசியில் பெயர்ச்சியாகி 19ஆம் தேதி மீனத்தில் உதயமாவார். ஏப்ரல் 13ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சியாவார். இது மேஷ சங்கராந்தி என்று அழைக்கப்படும். ஏற்கனவே மேஷ ராசியில் குரு இருக்கிறர். ஆகையால் 13 ஏப்ரல் முதல் மேஷத்தில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கை நடக்கும். ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய் மீன ராசியில் பெயர்ச்சியாவார். ஏப்ரல் 24ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சியாவார்.

April 2024 Rasipalan: ஏப்ரலில் நடக்க உள்ள பல்வேறு கிரக மாற்றங்களால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் பண வர அதிகமாக இருக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். பணி இடத்தில் அதிகப்படியான லாபத்தை காணலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | கனவில் மீன் வந்தால் இவ்வளவு சிக்கல்களா? அசுப அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். இதனால் நிதிநிலை நன்றாக இருக்கும். முக்கியமான நபர்களுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படும். இதனால் உங்களுக்கு அனுகூலமான நன்மைகள் உருவாகும். பணியிடத்தில் உங்கள் ஆற்றலை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். பணம் சேர்ப்பதிலும் இந்த காலத்தில் வெற்றி காண்பீர்கள்

தனுசு (Sagittarius)

ஏப்ரல் மாத கிரக மாற்றங்களால் தனுசு ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி உதயத்தால் இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், அமோகமான வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News