சூரிய பெயர்ச்சி, பொங்கல் ராசிபலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி பொங்கும், செல்வம் பெருகும்!!

Pongal Rasipalan: பொங்கல் நேரத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2023, 12:00 PM IST
  • கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மகத்தான வெற்றிகளைப் பெறுவார்கள்.
  • ஆனால் நீங்கள் சரியான நேரத்தை அடையாளம் காண வேண்டும்.
  • சரியான நேரத்தில் துவக்கப்படும் பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும்.
சூரிய பெயர்ச்சி, பொங்கல் ராசிபலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி பொங்கும், செல்வம் பெருகும்!! title=

சூரிய பெயர்ச்சி 2023: சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில், சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரியன் எந்த ராசியில் நுழைகிறாரோ அந்த ராசியின் பெயரால் சங்கராந்தி அழைக்கப்படுகிறது. இம்முறை சூரியன் மகர ராசியில் பிரவேசிக்க உள்ளதால் ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மாத கணக்கின் படி, இந்த நேரம் தை மாத பிறப்பாக கொண்டாடப்படுகின்றது. 

பயிர்கள் செழிக்கவும், உலக மக்கள் நலமாக வாழவும் எப்போதும் தனது வெளிச்சக்கீற்றுகளின் மூலம் அருள் பொழியும் கதிரவனுக்கு பொங்கல், கரும்பு, புதிய காய்கறிகள் படைக்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. பொங்கல் நேரத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்லதாக இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். பொங்கலுக்கு பிறகான நேரம் வேலையில்லாதவர்களுக்கு கடினமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்கள் கடினமாக உழைத்தால் அவர்களின் உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். தொழில் வெற்றிக்கான வாய்ப்புகள் உருவாகின்றன. ஆனால் காதல் விவகாரங்களில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும்.

மிதுனம்

சூரியனின் சஞ்சாரத்தால் மிதுன ராசிக்காரர்களின் பல காரியங்களில் தடைகள் இருந்தாலும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுகபோகங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனுடன், நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். சமூகத்தில் நற்பெயர் உயரும். மரியாதை கூடும். இந்த காலத்தில் அனுமனை வழிபட்டால் சுப பலன்களைப் பெறலாம்.

மேலும் படிக்க | ராகுவுடன் இணைந்து குரு சண்டாள யோகம் தரும் குருப் பெயர்ச்சி! மணத் தடைகள் நீங்கும் 

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மகத்தான வெற்றிகளைப் பெறுவார்கள். ஆனால் நீங்கள் சரியான நேரத்தை அடையாளம் காண வேண்டும். ஜோதிடத்தின்படி, சரியான நேரத்தில் துவக்கப்படும் பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். இந்த மாதத்திற்கு பிறகு பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக உள்ளது.

மீனம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மீன ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நல்ல பலனைத் தரும்.  நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். இது மட்டுமின்றி புதிய வேலை எதுவாக இருந்தாலும், அதை இப்போது தொடங்கலாம். இந்த நேரத்தில் எந்த வேலையிலும் அவசரம் காட்டுவது நல்லதல்ல. எந்த வேலையையும் மிகைப்படுத்தாதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மகரத்தில் இணையும் சனி - சுக்கிரன்! ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News