உங்கள் பிறந்த தேதி 1 தானே? உங்களுக்கு எந்த எண்ணுடன் காதல் உறவு கசக்கும் தெரியுமா?

Numerology Predictions: எண் கணிதத்தின் அடிப்படையில் காதல் உறவுகளின் கணிப்பு, எண் 1க்கு பிற எண்ணில் பிறந்தவர்களுக்கு காதலில் எந்த அளவு ஒத்துப்போகும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 20, 2022, 04:00 PM IST
  • எண் கணித காதல் உறவு பலன்கள்
  • காதல் உறவுக்கு ஒத்து வரும் கணக்குகள்
  • ஒன்றாம் எண்ணுடன் ஏழாம் பொருத்தமாகும் எண் இதுதான்
உங்கள் பிறந்த தேதி 1 தானே? உங்களுக்கு எந்த எண்ணுடன் காதல் உறவு கசக்கும் தெரியுமா? title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரம் என்பது மிகப் பெரிய கடல் ஆகும். ஜனன நேரத்தின் அடிப்படையில் ஜாதகம் கணிக்கப்பட்டு பலன்கள் சொல்லப்படுகிறது. ஆனால், ஜனன நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பலன்கள் சொல்வதைத் தவிர, எண் சோதிடம், பெயர் சோதிடம், குறி கூறுதல், கிளி சோதிடம், ராஜநாடி சோதிடம், நாடி சோதிடம், கைரேகை சோதிடம் என பல விதங்களில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அதில் பிறந்த தேதியின் அடிப்படையில் ஜோதிடம் சொல்வது என்பது உலக அளவில் பிரபலமானது. இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் தான், ஜனன நேரத்தின் அடிப்படையில் பலன் சொல்வது அதிகமாக உள்ளது.

பிறந்த தேதியின் அடிப்படையில் பலன்கள் சொல்வதில், காதல் துணையுடன் இணக்கம் என்பதே மிகவும் அதிக அளவில் பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதன் கணக்கீடு எண் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது உலக அளவில் அதிக அளவில் நம்பப்படுகிறது.

எண் கணிதத்தின்படி உங்கள் துணையுடன் / காதலுடன் நீங்கள் எவ்வளவு இணக்கமாக இருக்கிறீர்கள் என்பது தெரியுமா?

எண் கணிதத்தின் படி காதல் வாழ்க்கையின் இணக்கத்தைத் தெரிந்துக் கொள்ள, சம்பந்தப்பட்டவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

ஒன்றாம் எண் கொண்ட நண்பர்களுக்கு நிறைய பதற்றம் இருக்கும். அதிக சுயநலம் என்பது தான் அவர்களின் ஒரே ஒரு பிராதன மைனஸ் என்று சொல்லலாம். அறிவுசார்நதவர்களுடன் அவர்களுக்கு வலுவான உறவு ஏற்படும் என்பதும் பொதுப்பலன்கள் ஆகும். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பிற எண்களுடன் எப்படிப்பட்ட இணக்கமான உறவு இருக்கும்? தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பின் மகர ராசியில் சனி; அமோக பலனைப் பெறும் ‘3’ ராசிகள்! 

2ம் எண்ணுடன் 1 எண் உள்ளவர்களுக்கான காதல் உறவு
இருவருமே, உறவில் தங்கள் பங்கையும் செயல்பாட்டையும் மதித்து நடந்தால் இந்த ஜோடி வெற்றியானதாக இருக்கும். ஒன்றாம் எண்ணை சேர்ந்தவர் ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார் என்பதால், எண் 2 அவரை அனுசரித்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால், உறவு சுணக்கமாக இருக்கும். ஆரோக்கியமான காதல் உறவு அமைவதற்கு உறவில் சமநிலை இருக்கவேண்டும். உரையாடல் மற்றும் அறிவுசார் பரிமாற்றங்கள் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும்.

3ம் எண்ணுடன் 1 எண் உள்ளவர்களுக்கான காதல் உறவு
இலட்சிய உறவு என்று சொல்லலாம்.  1 இன் அற்புதமான விளைவுகளும், 3ம் எண் உடையவரின் வசீகரமும் புத்திசாலித்தனமும் ஒன்றாகச் சரியாகக் கலக்கும். இந்த கூட்டாண்மையில் நிறைய பரஸ்பர உத்வேகம் உள்ளது என்பதால் இயல்பாகவே எண் 1 மற்றும் 3 வெற்றிகரமான காதல் ஜோடியாக இருக்கும்.

4ம் எண்ணுடன் 1 எண் உள்ளவர்களுக்கான காதல் உறவு
இரு தரப்பிலிருந்தும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு நுட்பமான உறவு. 1 மற்றும் 4ம் எண்ணை சேர்ந்தவர்களுக்கு இடையில் காதல் உறவு சற்று மந்தமாகவே இருக்கும். 4ம் எண்காரரின் வித்தியாசமான பார்வைகள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டங்கள் காரணமாக இந்த இரு எண்ணைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் பதட்டங்கள் தோன்றக்கூடும்.

5ம் எண்ணுடன் 1 எண் உள்ளவர்களுக்கான காதல் உறவு
அதிக ஆற்றல் கொண்ட 5ம் எண்காரர்களுக்கு 1ம் எண்ணுடன் நல்ல உறவும், இணக்கமும் இருக்குக்ம். 5ம் எண்ணைச் சேர்ந்தவர்கள், இனிமையான கற்பனையை விரும்புகிறார்கள். 1 மற்றும் 5ம் எண் கொண்ட ஜோடிக்கு பல பொதுவான குறிக்கோள்கள் உள்ளன என்பதால், இந்த இணைப்பும் இணைவாகவே இருக்கும்.  

மேலும் படிக்க | குருவின் வக்ர பெயர்ச்சியால் வாழ்வில் வசந்தத்தை அனுபவிக்கும் 3 ராசிகள்

6 எண்ணுடன் 1 எண் உள்ளவர்களுக்கான காதல் உறவு

எண் 1 மற்றும் 6 இணைந்தால் வெற்றிகரமான ஜோடி என்று தைரியமாக சொல்லலாம். எண் 6, கடமை, அர்ப்பணிப்பு மற்றும் நல்லிணக்க உணர்வு மற்றும் நல்ல ஆலோசனைகள் நிறைந்தவர்களின் எண்ணாக் ஐருக்கும். இருப்பினும், ஒன்றாம் எண் கொண்டவர்களுக்கு இவர்களுடனான உறவு சில நேரங்களில் உணர்ச்சிகளில் சிக்கலை ஏற்படுத்தலாம்.  

7 எண்ணுடன் 1 எண் உள்ளவர்களுக்கான காதல் உறவு
இது ஒரு சுவாரஸ்யமான உறவாகும், இது உணர்ச்சியை விட அறிவார்ந்ததாக இருக்கிறது, குறிப்பாக 1 இன் ஆற்றல் 7 இன் உள் வலிமையை ஊக்குவித்து 7 இன் காரணத்தையும் ஞானத்தையும் மேல் கொண்டுவதற்குக்கு இந்த எண்களை சேர்ந்தவர்களின் காதல் உறவு உதவும்.

8 எண்ணுடன் 1 எண் உள்ளவர்களுக்கான காதல் உறவு
இந்த உறவில், இரு கூட்டாளிகளின் ஈகோக்கள் மோதலாம் என்பதும் இறுதியில் ஒருவரையொருவர் சோர்வடையச் செய்யலாம் என்பதும் பாதகமான விஷயம். இரண்டு எண் காரர்களுமே பொறுமையாக இருக்கமாட்டார்கள். ஆனால் ஒன்றாக இருக்க வேண்டுமானால், இருவரும் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

9 எண்ணுடன் 1 எண் உள்ளவர்களுக்கான காதல் உறவு
இந்த ஜோடி முதலில் உடனடியாக இணையும் ஜோடி அல்ல, ஆனால் எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் என்ற விதிப்படி, இந்த இரு எண்களும் இணைந்தால் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். 9ம் எண் பெருந்தன்மை மற்றும் மனிதநேயம் நிறைந்தது. மென்மையானது. உலகம் தங்களைச் சுற்றியே சுழல்கிறது என்ற எண்ணம் கொண்ட 1ம் எண்காரர்களும் இணைந்து, 9ம் எண் காரர்கள், மற்றவர்களின் பார்வைகளைப் புரிந்துகொள்ள கற்றுக்கொள்வார்கள். 

மேலும் படிக்க | அக்டோபர் 18 வரை இந்த '6' ராசிகளின் தலைவிதி சூரியனைப் போல் பிரகாசிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News