செவ்வாய் - சனியினால் உண்டாகும் நவபஞ்சம ராஜயோகத்தை அனுபவிக்கும் ‘3’ ராசிகள்!

ஜோதிடத்தில், பல வகையான ராஜயோகங்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று 'நவபஞ்சம ராஜயோகம். 2 கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைந்தால், இந்த ராஜயோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் செவ்வாய் மிதுன ராசியில் நுழைந்த நிலையில், சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த நேரத்தில் சனியில் இருந்து ஐந்தாம் வீட்டில் செவ்வாயும், செவ்வாயிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சனியும் அமர்ந்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த 'நவபஞ்சம் ராஜயோகம்' உருவாகியுள்ளது. இதன் மூலம் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும். அந்த 3 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2023, 10:43 AM IST
  • சனியில் இருந்து ஐந்தாம் வீட்டில் செவ்வாயும், செவ்வாயிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சனியும் அமர்ந்துள்ளனர்.
  • நல்ல லாபம் கிடைப்பதுடன் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
  • உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.
செவ்வாய் - சனியினால் உண்டாகும் நவபஞ்சம ராஜயோகத்தை அனுபவிக்கும் ‘3’ ராசிகள்! title=

ஜோதிடத்தில், பல வகையான ராஜயோகங்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று 'நவபஞ்சம ராஜயோகம். 2 கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைந்தால், இந்த ராஜயோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் செவ்வாய் மிதுன ராசியில் நுழைந்த நிலையில், சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த நேரத்தில் சனியில் இருந்து ஐந்தாம் வீட்டில் செவ்வாயும், செவ்வாயிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சனியும் அமர்ந்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த 'நவபஞ்சம் ராஜயோகம்' உருவாகியுள்ளது. இதன் மூலம் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும். அந்த 3 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மூன்றில் செவ்வாயும் பதினொன்றாம் வீட்டில் சனியும் சஞ்சரிக்கிறது. இரண்டு கிரகங்களும் தங்கள் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால், இந்த ராஜ யோகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ராஜ யோக பலன் காரணமாக மன தைரியம் அதிகரிப்பு, சகோதரர்களால் ஆதாயம், பணியில் முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம் போன்ற விஷயங்கள் நடப்பதை கண்கூடாக காணலாம். இந்த நேரத்தில் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். டெக்னிக்கல் துறையுடன் தொடர்புடையவர்கள் இந்த நேரத்தில் புகழ் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பார்க்கிறார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாமிடத்தில் சனியும், பத்தாம் வீட்டில் செவ்வாயும் அமர்ந்திருக்கிறார்கள். ஆறாமிடத்தில் சனியும், பத்தாம் வீட்டில் செவ்வாயும் மிகுந்த பலம் பெறுகிறார். இந்த ராஜயோகத்தின் பலன் மூலம், நீங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம், அதே நேரத்தில் சில பெரிய பொறுப்புகளும் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்களுக்கு செவ்வாய் மற்றும் சனியின் ராஜயோகம் உங்கள் எதிரிகள் அனைவரையும் அழிக்கும் வகையில் செயல்படப் போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் எங்கிருந்தோ ஒரு பெரிய வேலை வாய்ப்பைப் பெறலாம். நீண்ட நாட்களாக சொத்து வாங்க நினைத்தால், அந்த கனவு இப்போது நிறைவேறும்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு லக்னத்தில் சனியும், செவ்வாய் ஐந்தாம் வீட்டில் அமர்ந்தும் இருக்கிறார். இந்த ராஜயோகத்தின் பலனால் சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் இயந்திர வேலைகளுடன் தொடர்புடையவராக இருந்தால், இந்த நேரத்தில் சனி உங்களுக்கு நன்மைகளைத் தருவார். செவ்வாயின் தாக்கத்தால் மூத்த சகோதரர் மற்றும் நண்பர்களின் உதவி இந்த நேரத்தில் கிடைக்கும். செவ்வாய் மற்றும் சனியின் இந்த நவபஞ்சம ராஜயோகம் உங்கள் வாழ்க்கையில் செல்வ வளத்தை அதிகரிக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் சாதகமான காலம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News