பசுமை நிறைந்த மரங்களும் செடிகளும், மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவை. இவை நேர்மறை ஆற்றலை பரப்பி, நமது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதோடு எதிர்மறை ஆற்றலை நீக்கி, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில செடிகள், வீட்டிற்கு செல்வ செழிப்பை கொண்டு வந்து சேர்க்கும். வீட்டிற்கு சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் அள்ளிக் கொடுக்கும் செடிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மோகினி செடி
மோகினி செடியை ஆங்கிலத்தில் ஜேட் செடி என்று அழைப்பார்கள். இந்த செடியை வீட்டில் நடுவதால் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் நிலைத்திருக்கும். வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும் இந்த செடி, ஒரு பணம் காய்க்கும் மரம் என்றால் மிகை இல்லை. இந்த செடியை வீட்டின் பிரதான வாயிலில் அல்லது பால்கனியில் வைப்பதால் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.
ஸ்நேக் பிளான்ட்
வீட்டில் ஸ்நேக் பிளான்ட் வளர்ப்பதும், பொருளாதார நிலையை மேம்படுத்தி, நிதி சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். மேலும், சில சமயங்களில் கடுமையாக முயற்சி செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாது. அந்த வகையில் பிளாட்டை வளர்த்தால், வேலையில், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மணி பிளான்ட்
மணி பிளான்ட் பெயருக்கு ஏற்றபடியே, பணத்தை வாரி வழங்கும் தன்மை கொண்டது. கடன் தொல்லை அதிகம் இருந்தாலும், ஏழ்மையில் இருந்து விடுபட வேண்டும் என்றாலும், வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் நல்லது. இது பணம் காய்க்கும் மரமாக வீட்டிற்கு செல்வ வளத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
வன்னி மரம்
வீட்டில் வன்னி மரச்செடியை வைப்பது, வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களில் இருந்தும் விடுபட உதவும். சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான செடியான வன்னி மரம், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகள் மற்றும் தடைகளை நீக்கி, குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வரும்.
மேலும் படிக்க | வருமானத்தில் எவ்வளவு தொகையை நன்கொடையாக வழங்கலாம்? விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
ஸ்பைடர் செடி
ஸ்பைடர் சுடி என்று அழைக்கப்படும் சிலந்தி செடியை நடுவதால், வீட்டில் அதிர்ஷ்டம் என்றென்றும் நிலைத்திருக்கும். அதோடு, சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளை சந்தித்தாலும், ஸ்பைடர் செடி இதற்கு தீர்வை தரும்.
துளசி செடி
இந்து மதத்தில் தெய்வத்திற்கு நிகராக வணங்கப்படும் துளசி செடி, ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியமான ஒரு செடி. இது கெட்ட ஆற்றல் அனைத்தையும் நீக்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்து சேர்க்கிறது. துளசிச் செடியை வீட்டில் வைத்து பூஜித்து வந்தால், அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது.
அபராஜிதா செடி
துளசி செடியை போலவே அபராஜித் செடியின் மிகவும் புனிதமான செடியாக கருதப்படுகிறது. சங்கு பூ செடி என்றும் அழைக்கப்படும் இந்தச் செடியை வீட்டில் வைத்திருப்பதால், மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கும்ப ராசியில் உதயமாகும் சனி.. இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, பொற்காலம் ஆரம்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ