சனிப்பெயர்ச்சி... பாடாய் படுத்தும் சனி பகவானை மகிழ்விக்க ‘சில’ எளிய பரிகாரங்கள்!

Saturn Transit & Jothida Pariharams : சனி பெயர்ச்சியினால் ஏற்பட்டுள்ள அசுப பலன்களை குறைக்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும், சனி தோஷம் நீங்கவும், உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 7, 2024, 01:09 PM IST
  • ராசிப்படி சனிபகவானின் மந்திரத்தை ஜபித்து பரிகாரம் செய்தால், சனி பகவானை மகிழ்விக்கலாம்.
  • பகவான் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது.
  • தனது ராசிக்கு ஏற்றவாறு மந்திரத்தை ஜபித்து பரிகாரம் செய்தால், வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கலாம்.
சனிப்பெயர்ச்சி... பாடாய் படுத்தும் சனி பகவானை மகிழ்விக்க ‘சில’ எளிய பரிகாரங்கள்! title=

2024ம் ஆண்டு சனிபகவானின் அருள் கிடைக்கவும், சனி பெயர்ச்சியினால் ஏற்பட்டுள்ள அசுப பலன்களை குறைக்கவும், ஏழரை நாட்டு சனி, சனி தோஷம் ஆகிய அசுப பலன்களைக் குறைக்கவும், ராசிப்படி மந்திரங்கள் சொல்லி பரிகாரங்களைச் செய்வது நல்ல பலன் கொடுக்கும். ஒருவர் தனது ராசிக்கு ஏற்றவாறு மந்திரத்தை ஜபித்து பரிகாரம் செய்தால், அந்த நபர் விரைவில் வெற்றி பெறுவார் என்றும் அவரது விருப்பங்கள் நிறைவேறும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. மேலும், ராசிப்படி சனிபகவானின் மந்திரத்தை ஜபித்து பரிகாரம் செய்தால், ஜாதகத்தில் சனிபகவானின் ஸ்தானம் வலுவடைந்து, சனிபகவானின் அசுப பார்வையும் நிலைத்து, எல்லா நெருக்கடிகளிலிருந்தும் விடுபட்டு வாழ்க்கையில் வலுவான நிதி நிலையுடன் நிலைத்திருப்பீர்கள். ராசிப்படி எந்தெந்த மந்திரங்கள் ஜபிக்க வேண்டும் மற்றும் பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்...

இந்துமத சாஸ்திரங்களில் பகவான் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. பகவான் அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். இந்நிலையில், சனி தோஷம் நீங்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும் உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பாராயணங்கள் மற்றும் பரிகாரங்கள் (Astro News) உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் பகவான் அனுமன் கவசம் பாராயணம் செய்தால் சனி தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் உணவில் சிவப்பு மிளகாய்க்கு பதிலாக கருப்பு மிளகு பயன்படுத்தவும். 

ரிஷபம்: ஹனுமான் கோவிலிலோ அல்லது வீட்டிலோ ராமாயணத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.  இதற்குப் பிறகு, சனி தேவருக்கு உணவை அர்ப்பணித்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் அதை சாப்பிட வேண்டும்

மிதுனம்: ஆரண்யக் காண்டம் பாராயணம் செய்யவும். இதற்குப் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றிவதோடு, பசுவுக்கு உணவளிக்கவும். இது தவிர ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். 

மேலும் படிக்க | சுக்கிர தசை, அனைத்திலும் வெற்றி: இந்த ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் ராஜயோகம்

கடகம்: கடக ராசிக்காரர்கள் ஹனுமான் கவசத்தை பாராயணம் செய்து, மலர்களால் ஹனுமனை பூஜித்து, அந்த மலர்களை நீர் நிலைகளில் சேர்க்கவும். இது தவிர ஏழை எளியவர்களுக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் தினமும் பகவான் ஹனுமான் சாலீசா பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது தவிர ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்யவும்.  இவ்வாறு செய்வதன் மூலம் சனியின் கோபம் நீங்கி கடனில் இருந்து விடுபடலாம்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும். பகவான் ஹனுமனின் படத்தின் முன் நெய் விளக்கை ஏற்றவும்.  இது தவிர சனியை மகிழ்விக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும்  தண்ணீரில் பால் மற்றும் சர்க்கரை கலந்து அரச மரத்தின் வேரில் ஊற்றி அர்பணிக்கவும். 

துலாம்: துலாம் ராசிக்காரர்களும் சுந்தர காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும். சனிக்கிழமையன்று விரதம் இருந்து, அன்றைய தினம் கருப்பு பறவை (காகம்), கருப்பு நிற பசு அல்லது கருப்பு நாய்க்கு உணவளிக்கவும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் ஹனுமனின் ஆசி பெற, ஹனுமான் அஷ்டகம் பாராயணம் செய்ய வேண்டும்.  மேலும் சனி பகவானை மகிழ்விக்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். 

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் அயோத்தியா காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேலும், ஹனுமானுக்கு வெண்ணை சாற்றி வழிபடவும். இது தவிர ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

மகரம்: மகர ராசிக்காரர்கள் கிஷ்கிந்தா காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். மேலும், ஹனுமானுக்கு சிவப்பு பயறு பிரசாதம் செய்து நைவேத்தியம் செய்யலாம். அதோடு மீன்களுக்கு உணவளிக்கவும். இது தவிர,  ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிகவும் நல்லது. 

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் உத்தர காண்டம் பாராயணம் செய்யவும். மேலும், ஹனுமான் இனிப்பு வகை ஒன்றை தயாரித்து பிராசாதத்தை விநியோகிக்கவும். அதை எறும்புகளுக்கு உணவளிப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.  இதைச் செய்வதன் மூலம் சனி தேவர் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வாதங்களைப் பொழிவார் என்று நம்பப்படுகிறது. 

மீனம்: மீன ராசிக்காரர்கள் ஹனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும். இது தவிர ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்யுங்கள். அவர்களுக்கு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்வதும் நல்ல பலன் கொடுக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீங்கள் ஜனவரி மாதம் பிறந்தவரா? அப்போ உங்கள் குணம் இப்படித்தான் இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News