மேஷ ராசியில் உதயமாகும் குரு பகவான்! குபேரனின் அருளை பெற்றுத் தரும் குரு சஞ்சாரம்

ஒருவரின் அறிவு, வளர்ச்சி, கல்வி, குழந்தைகள், தர்மம், தந்தை-மகன் உறவு என வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்  பிருஹஸ்பதிபதியின் சஞ்சாரம் அனைவரின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 30, 2023, 11:16 PM IST
  • குருவின் உதயத்தால் பணம் கொழிக்கும்
  • ஏப்ரல் 27 முதல் ஜாலி தான்
  • ஏப்ரல் 27க்குப் பிறகு முக்கியமான வேலைகளைச் செய்யலாம்
மேஷ ராசியில் உதயமாகும் குரு பகவான்! குபேரனின் அருளை பெற்றுத் தரும் குரு சஞ்சாரம் title=

Guru Gochar Effect 2023: ஜோதிடத்தின் படி, எந்த ஒரு கிரகத்தின் பெயர்ச்சியும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருவரின் அறிவு, வளர்ச்சி, கல்வி, குழந்தைகள், தர்மம், தந்தை-மகன் உறவு என வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் குரு பிருஹஸ்பதி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசித்தால் அனைவரின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால், அந்த நபருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றாலும், குரு எந்த ராசியில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குருவின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஏப்ரல் மாதத்தில், 27 ஏப்ரல் 2023 அன்று குரு மேஷ ராசியில் உதயமாகிறார். குருவின் மேஷ ராசி உதயத்தினால், 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசயமான மாற்றங்கள் தென்படும். செல்வம் பெருகும்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வச்செழிப்பு அதிகரிக்கும்
 
மேஷம்:

ஜோதிட சாஸ்திரப்படி, குருவின் ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்கள் ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இதுமட்டுமின்றி இவர்களின் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்குக்ம். மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். அதே சமயம், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. பணியிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த நேரம் வணிகர்களுக்கும் மிகவும் மங்களகரமான காலமாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் சாதகமாக அமையும். இந்த நேரம் மகர ராசியினருக்கு நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வீட்டிற்கு மாறும் வாய்ப்புக் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை பலம் பெறும். அனைத்து வேலைகளிலும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சொத்தில் முதலீடு செய்ய உகந்த நேரம் இது. இந்த நேரத்தில் வீட்டில் எந்த சுப மற்றும் மங்களகரமான காரியங்கள் நடைபெறும்.  

மேலும் படிக்க | கஜகேசரி யோகத்தினால் ஆண்டு முழுவதும் அபரிமிதமான செல்வம் பெறும் ‘சில’ ராசிகள்!

கடக ராசி

இந்த காலம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில், நிறைய லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் செய்யலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகம் செய்பவர்கள் பல நன்மைகளைப் பெறலாம். சம்பளம் உயரும். இக்காலகட்டத்தில் கடினமாக உழைப்பவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.
 
துலாம்

மேஷ ராசிக்கு குரு செல்வது துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். கூட்டு வணிகம் செய்ய நினைத்தால், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இதுவே சிறந்த நேரம். இந்த காலகட்டத்தில் வியாபாரிகளுக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 4 ராசிக்காரர்களுக்கு விநாசத்தை ஏற்படுத்தும் சூரியன் ராகு சேர்க்கை! விநாச தோஷம் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News