கடகத்துக்கு மாறும் சுக்கிரன்: 4 ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பண வரவு அதிகரிக்கும்

Shukra Gochar: சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், இதனால், 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2023, 12:13 PM IST
  • அலுவலக பணிகளில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பல நன்மைகளைத் தரும்.
  • புதிய கலைகளை கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு அதிகரிக்கும்.
  • உங்கள் அனைத்து வேலைகளிலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகத்துக்கு மாறும் சுக்கிரன்: 4 ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பண வரவு அதிகரிக்கும் title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் கிரகம், அழகு மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று இருந்தால் அவரது அதிர்ஷ்டம் பிரகாசிக்க அதிக நேரம் எடுக்காது என்பது ஐதீகம். சுக்கிரன் கிரகம் ஒவ்வொரு மாதமும் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக பல ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கிறது. அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் சில பிரச்சனைகளும் நஷ்டமும் ஏற்படுகின்றது.

இப்போது 30 ஆம் தேதி சுகங்களை அள்ளித் தரும் சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், இதனால், 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் சுகபோகங்களை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான்: 

மேஷ ராசி

அலுவலக பணிகளில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பல நன்மைகளைத் தரும். புதிய கலைகளை கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு அதிகரிக்கும். உங்கள் அனைத்து வேலைகளிலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு லாப வாய்ப்புகள் உருவாகும். உடல் நலத்தில் சில பிரச்சனைகள் வரலாம், அதனால் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்தால் அது சரியாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கைகூடும். இந்த காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் இருக்கும். பண ஆதாயமும் உண்டாகும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சி காலத்தில் தங்கள் ஆளுமை மற்றும் வார்த்தைகளால் மற்றவர்களின் இதயங்களை வெல்ல முடியும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறலாம். புதிய பொறுப்புகளையும் பெறலாம். உங்கள் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் வந்து உங்கள் மனம் அமைதியாக இருக்கும். பண வரவு மற்றும் செல்வச்சிழிப்புக்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் மன உறுதி அதிகமாக இருக்கும். உங்கள் நல்ல குணம் காரணாமாக பிறர் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.  

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: கடகத்துக்கு நிம்மதி... கன்னிக்கு அச்சம்... உங்கள் ராசிக்கு என்ன

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் சில பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பல வெற்றி வாய்ப்புகளைத் தரும். உங்கள் மனதில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. குடும்பப் பெரியவர்களின் ஆசியைப் பெறுவீர்கள். திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம்.

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருளால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பலருக்கு வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணி மாறுதல் முயற்சியில் இருப்பவர்களுக்கு அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் சில தவறான புரிதல்கள் ஏற்படலாம். அன்புடன் அதைத் தீர்த்து, இன்னல்களைத் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக புதிய வேலை தேடிக் கொண்டிருந்தவர்களின் விருப்பம் நிறைவேறும். குழந்தைப் பேறு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வக்ரத்தில் செல்லும் சனி..! 7 ராசிக்காரர்கள் 5 மாதங்கள் கவனமாக இருக்கணும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News