செவ்வாய் தோஷத்தை போக்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி?

 Vaikasi Visakam Fasting & Abhishekam: முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2024, 08:55 PM IST
  • தோஷங்களைத் தீர்க்கும் வைகாசி விசாகம்
  • விரதம் இருந்து வழிபடும் முறை
  • வைகாசி விசாகத்தன்று அபிஷேகம் செய்தால் என்ன பலன்?
செவ்வாய் தோஷத்தை போக்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி? title=

வைகாசி மாத பெளர்ணமி நாளில் புத்த பூர்ணிமாவும் வருகிறது. புத்த மதத்தை பின்பற்றுபவர்கள், யோகா ஆர்வலர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் என பலரின் வாழ்க்கையிலும் மிகவும் குறிப்பிடத்தக்க நாள் வைகாசி விசாகம் ஆகும். நாளை வைகாசி மாத விசாக நட்சத்திர நாள். சுபமான இந்த நாள் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த இந்த நாளன்று தான் சிவகுமரனாக கார்த்திகேயன் உதித்தார் என்பதால் சைவ மதத்திலும் வைகாசி விசாகம் முக்கியத்துவம் பெற்றது. 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வைகாசி விசாகத்தன்று செய்யும் வழிபாடுகள் வாழ்க்கையில் வளத்தை கூட்டும். முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி விசாகம் - வழிபடுவது எப்படி?
முருகன் ஜனித்த நாளான வைகாசி விசாகம் நாளில் முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு துன்பங்களும் துயரங்களும் நீங்கி, அல்லலற்ற வாழ்வு வாய்க்கும். நிம்மதியான வாழ்க்கை அமைய செய்ய வேண்டியவை இவை தான்.

மேலும் படிக்க | நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!

வைகாசி விசாகம் தானங்கள்
குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் 

வைகாசி விசாகம் விரதம்
வைகாசி விசாகம் நாளன்று விரதம் இருப்பவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்டு மற்ற இரு வேளையிலும் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். வைகாசி விசாக நாளன்று விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்,  எதிரிகளால் ஏற்படும் ஆபத்துக்கள் நீங்கும். 

வைகாசி விசாகம் பூஜை செய்யும் முறை
வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபட வேண்டும். வைகாசி விசாகம் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் முருகப்பெருமான் படத்தின் முன்பு ஐந்து முக விளக்கேற்றி வழிபட வேண்டும். அறுமுகனுக்கு ஐந்து வகை பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் செய்து பஞ்சாமிர்தத்தையும் படைக்கலாம். கந்தனின் அருளைப் பெறா கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்.ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை முடிந்த அளவு உச்சரிக்க வேண்டும்.

மேலும் படிக்க | சாகாவரம் பெற்றாலும் அகங்காரமே எமனாகும்! விஷ்ணுவின் நரசிம்மர் ஜெயந்தி தினம் மே 21!

முருகனுக்கு அபிஷேகம்
வைகாசி விசாகம் நாளில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும் 
வைகாசி விசாகம் நாளில் கார்த்திகேயனுக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்தால் கடன்தொல்லை தீரும் 
வைகாசி விசாகம் நாளில் சிவகுமரனுக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்தால் நன்மைகள் நடைபெறும். 
வைகாசி விசாகம் நாளில் வள்ளி மணாளனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். 
வைகாசி விசாகம் நாளில் தேவ சேனாதிபத்க்கு சந்தன அபிஷேகம் செய்தால் சரும நோய்கள் நீங்கும். 
வைகாசி விசாகம் நாளில் பார்வதி மைந்தனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் பார் போற்றும் செல்வம் சேரும். 
வைகாசி விசாகம் நாளில் தம்பதி சமேதராக விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குடும்பத்தில் இணக்கம் அதிகரிக்கும்..
வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும், எதிரிகள் தொல்லை அகலும், கடன் பிரச்சினைகள் தீரும். நிம்மதியான வாழ்க்கை வாய்க்கும்.

மேலும் படிக்க | ஜூன் 5 சனி ஜெயந்தி! சனீஸ்வரரின் அருட்கடாட்சம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News