ஆஞ்சநேயருக்கு பிடித்த ராசிகள்: இவர்களின் துயரங்களை நிமிடத்தில் போக்கி அருள் மழை பொழிவார் அனுமன்

Favourite Zodiac Signs of Lord Hanuman: அனுமன் தன்னை வணங்கும் அனைவருக்கும் எந்த வித பாரபட்சமுமின்றி அருள் புரிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் அவருக்கு மிக பிடித்தமான ராசிகளாக இருக்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2024, 10:36 AM IST
  • மேஷ ராசிக்காரர்கள் மீது அனுமன் சிறப்பு அருள் பொழிகிறார்.
  • இவர்கள் வாழ்வில் எப்போதும் நிதி நெருக்கடி இருக்காது.
  • இவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
ஆஞ்சநேயருக்கு பிடித்த ராசிகள்: இவர்களின் துயரங்களை நிமிடத்தில் போக்கி அருள் மழை பொழிவார் அனுமன் title=

Favourite Zodiac Signs of Lord Hanuman: வீரம், விவேகம், உறுதி, பக்தி, நட்பு ஆகியவற்றின் அடையாளமாகவும் தனித்துவமான கடவுளாகவும் இருப்பவர் ஆஞ்சநேயர். சைவ வைஷ்ணவ பேதம் இன்றி அனைத்து மக்களாலும் அவர் வணங்கப்படுகிறார். மனதில் இருக்கும் சங்கடங்களையும், குழப்பங்களையும், அச்சங்களையும் உடனடியாக தீர்த்து வைக்கும் ஆஞ்சநேயர், நம்முடனேயே இருந்து நம்மை காக்கிறார். அனுமனை தொடர்ந்து வழிபட்டால், வாழ்க்கையில் தடைகள் குறையும், நேர்மறையான முடிவுகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ராமர் மேல் அனுமன் கொண்ட பக்தி மிகச்சிறந்த பக்தி நிலைக்கு உதாரணமாக போற்றப்படுகின்றது. ராமபிரானின் பஜனைகள், அவர் பற்றிய கதாகாலக்‌ஷேபங்கள் என அவர் பெயர் எங்கு ஒலித்தாலும் அனுமன் உடனடியாக அங்கு வந்து விடுகிறார் என்பது ஐதீகம். சிவனின் அம்சமாகவும் அவர் பார்க்கப்படுகிறார். சைவ மரபில், அவர் சிவனின் அவதாரமாகவே பார்க்கப்படிகிறார். அவரது கதைகளை ராமாயணத்தில் மட்டுமல்லாமல், மகாபாரதத்திலும் இன்னும் பல்வேறு புராணங்களிலும் காண மூடிகின்றது. வைணவக் கோயில்களில் அனுமனுக்கு தனி சன்னிதி உண்டு. செவ்வாய், வியாழம் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வேண்டினால் அவர் அருள் மழை பொழிவார். செவ்வாய்கிழமை அன்று அனுமன் சாலிசா மற்றும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும். 

அனுமன் தன்னை வணங்கும் அனைவருக்கும் எந்த வித பாரபட்சமுமின்றி அருள் புரிகிறார். அது மட்டுமின்றி, ராம பக்தர்களுக்கும் அவர் சிறப்பு அருள் புரிகிறார். அனைத்து ராசிக்காரர்களும் அவருக்கு சமமே. எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் அவருக்கு மிக பிடித்தமான ராசிகளாக இருக்கிறார்கள். இவர்கள் வாழ்வில் வரும் அனைத்து வித கஷ்டங்களையும் அவர் போக்கி அருள் புரிகிறார். குறிப்பாக அனுமனின் பக்தர்களை சனி பகவானும் சோதிப்பதில்லை. சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி (Ezharai Sani) என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அனுமனை வேண்டினால் தீர்வு கிடைக்கும்.  அனுமன் எப்போதும் அருள்பாலிக்கும் அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்கள் மீது அனுமன் சிறப்பு அருள் பொழிகிறார். இவர்கள் அனுமன் அருளால் கிடைக்கும் புத்திசாலித்தனத்தால் வாழ்வில் நல்ல வருமானத்தை பெறுகிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் அதீத வெற்றிகளை பெறுவார்கள். இவர்கள் வாழ்வில் எப்போதும் நிதி நெருக்கடி இருக்காது. இவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

சிம்மம் (Leo)

சிம்மம் அனுமனுக்கு மிகவும் பிடித்தமான ராசியாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் மீது அனுமன் சிறப்பு ஆருள் பொழிந்து தனது சிறப்பு ஆசிகளை வழங்குகிறார். இந்த ராசிக்காரர்கள் என்ன செய்தாலும் அனுமன் அருளால் நிச்சயம் அதில் வெற்றி பெறுவார்கள். அவர்களுடைய வாழ்வில் வரும் அனைத்து கஷ்டங்களையும் அவர் உடனடியாக நீக்கி வைக்கிறார். இவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் வளத்தையும் வழங்குகிறார். 

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நேரம்!

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கும் ஆஞ்சநேயரின் அருள் எப்போதும் இருக்கின்றது. செவ்வாய்கிழமையன்று அனுமனை வழிபடுவதால் பொருளாதார வளம் பெருகும். அனுமன் அருளால் இவர்களது வீட்டில் எப்போதும் அமைதியான சூழல் நிலவுகிறது. மேலும், அனுமன் இவர்கள் வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றலை அகற்றி நேர்மறை ஆற்றலை நிரப்புகிறார். 

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு அனுமனின் ஆதரவு எப்போதும் இருக்கின்றது. இவர்கள் எந்த பணியை தொடங்கினாலும் அதில் அனுமன் அருளால் வெற்றி காண்கிறார்கள். இவர்கள் வாழ்வில் எப்போதும் பணப்பற்றாக்குறை இருப்பதில்லை. இவர்களுக்கு வாழ்நாள் முழுதும் நிதி ஆதாயமும் கிடைக்கின்றது. இவர்களது குடும்ப வாழ்க்கையில் அமைத்தியும் மகிழ்ச்சியும் குறைவில்லாமல் இருக்கும். குழந்தைகளால் இவர்கள் அதிகப்படியான மகிழ்ச்சியை பெறுகிறார்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தொடங்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News