Monthly Horoscope: மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!

Planet Transit in May & Lucky Zodiacs: மே மாதம் குரு பகவான்  உட்பட 4 கிரகங்களின் ராசி மாற்றத்தினால், மேஷம் உட்பட 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்திற்கும் குறைவிருக்காது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2024, 02:03 PM IST
  • 2024 மே மாதத்தில், குரு பகவான் உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன.
  • மே 10 ஆம் தேதி, புதன் ரிஷபத்திற்கு மாறுகிறார்.
  • மே மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சி மற்றும் கிரகசேர்க்கை பலன் தரும்?
Monthly Horoscope: மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..! title=

Planet Transit in May & Lucky Zodiacs: 2024 மே மாதத்தில்,  முக்கிய கிரக பெயர்ச்சிகளும், அதனால் சில கிரகங்களின் சுபச் சேர்க்கைகளும் உருவாக உள்ளது. இந்த மாதம், குர் பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷபத்தில் பெயர்ச்சியாகிறார். மேலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷபத்தில் 4 கிரகங்களின் சேர்க்கை உருவாகிறது. இதில் குரு பகவானுடன் சுக்கிரன், புதன் மற்றும் சூரியன் இணைகிறார்கள்

2024 மே மாதத்தில், குரு பகவான் உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் நிலையில், மே 10 ஆம் தேதி, புதன் ரிஷபத்திற்கு மாறுகிறார். அதேசமயம் சூரியன் மே 14ல் ரிஷப ராசிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, மே 19 அன்று சுக்கிரனும் ரிஷப ராசிக்கு மாறுகிறார். அதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகும். 

இது தவிர ரிஷப ராசியில் திரிகிரஹி, சதுர்கிரஹி யோகமும் உருவாகும். இந்தச் சூழ்நிலையில் மேஷம், கடகம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் சிறப்பாம்ன பலன்களை தரப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றமும், குடும்பத்தில் செழிப்பும் உண்டாகும். மே மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சி மற்றும் கிரகசேர்க்கையால் பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி: மே மாத பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மே மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் மூத்த அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கும் மே மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். பண வரவிற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.இதனால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். மேலும், இந்த மாதம் உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் இந்த மாதம் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். நீங்கள் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், இந்த மாதம் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்

கடக ராசி: மே மாத பலன்கள்

கடக ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் சில உயர் வெற்றிகளைப் பெறலாம். இந்த மாதம் உங்கள் தொழிலுக்கு மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள். உங்களுக்கு வெற்றி வாய்ப்புகளும் இருக்கும். உங்கள் தொழிலைப் பொறுத்தவரை மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். 

சிம்ம ராசி: மே மாத பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணியிடமாற்றம் விரும்பும் பணியாளர்களுக்கு இந்த மாதம் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். இந்த நேரத்தில், அலுவலகத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதற்கு பதிலாக உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த மாதம் உங்களின் வேலையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள்.  மேலும் பல்வேறு துறைகளில் உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். இந்த மாதம் உங்களின் தொழில் வாழ்க்கை வெற்றிகரமானதாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

துலாம் ராசி: மே மாத பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் நல்ல பலனைத் தரப் போகிறது. வேலையை மாற்ற விரும்புபவர்கள் இதற்கான முயற்சியில் வெற்றி பெறலாம். இந்த மாதம் உத்தியோகத்தில் தகுந்த மாற்றத்திற்கான வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வணிகம் மற்றும் அரசுத் துறைகளுக்குப் பலவிதமான பலன்கள் உண்டாகும். உங்கள் வேலையில் சரியான வெற்றியை அடைவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். உங்கள் வருமானத்தில் தொடர்ச்சியான உயர்வையும் காண்பீர்கள். இந்த மாதம் அதிக நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். எனினும், உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் மகிழ்ச்சிக்காக பணத்தை செலவிடலாம்.

மீனம் ராசி: மே மாத பலன்கள்

மீன ராசிக்காரர்களுக்கு மே மாதம் பலன் தரப் போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் சிறந்த பணிக்கான வெகுமதிகளைப் பெறலாம். சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் சூழ்நிலை மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் பல பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உள்ள மூத்தவ அதிகாரிகள் உங்கள் மீது நேர்மறையான பார்வையை வைத்திருப்பார்கள். கடின உழைப்பிற்குப் பிறகு நீங்கள் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியால் உங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில் சாதகமான முடிவுகள் காணப்படும். சகோதரிகள் மற்றும் நண்பர்களால் பொருளாதார ஆதாயம் ஏற்படும். இந்த மாதம் செலவுகள் சீராக இருக்கும், வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News