சனி, ராகு, கேது அருளால் தீபாவளி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

Diwali 2023 Horoscope: சில ராசிகளுக்கு கிரக மாற்றங்களால் தீபாவளி முதல் பல அற்புதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2023, 10:01 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு பணியிடத்திலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
  • அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
சனி, ராகு, கேது அருளால் தீபாவளி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும் title=

Diwali 2023 Horoscope: ஆண்டின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை நாம் அனைவரும் செய்து கொண்டிருக்கிறோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த ஆண்டின் தீபாவளி மிக அபூர்வமானது. ஏனெனில், இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னர் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னர் சனி பகவான், ராகு, கேது ஆகிய கிரகங்களில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சனி, ராகு, கேது ஆகியவை முக்கிய கிரகங்களாக கருதப்படுகின்றன. அக்டோபர் மாத இறுதியில் ராகுவும் கேதுவும் பெயர்ச்சி ஆனார்கள். நவம்பர் 4 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார். இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களினால் ஏற்பட்ட தாக்கங்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இந்த மாற்றங்களால் தீபாவளி முதல் பல அற்புதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

தீபாவளி முதல் பொற்காலத்தை அனுபவிக்கவுள்ள ராசிகள்

1. மேஷ ராசி (Aries)  

மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரிடம் இருந்து திடீரென்று நல்ல செய்தி வரலாம். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலத்தில் பண ஆதாயங்கள் இருக்கும், இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். சிவபெருமானின் அருளால் வாழ்க்கை ஆனந்தமயமாக மாறும்.

2. மிதுன ராசி (Gemini)

மிதுன ராசிக்காரர்களின் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரம் மற்றும் அலுவலக வேலைகளில் இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த காலத்தில் மன அமைதி இருக்கும். நிதிப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலையில் வெற்றியை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுங்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | குருவின் அருளால் இந்த ராசிகளுக்கு 2024 ஆரம்பமே அட்டகாசம்!! அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்

3. சிம்ம ராசி (Leo)

இந்த வேளையில் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வேலையை மாற்றுவது பற்றி யோசிக்கலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு உதவ அனைவரும் தயாராக இருப்பார்கள்.

4. கன்னி ராசி (Virgo)

கன்னி ராசிக்காரர்கள்ளுக்கு இந்த காலத்தில் வேலையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கலாம். ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துவீர்கள். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். இந்த நேரம் வேலை மற்றும் வணிகத்திற்கான வரப்பிரசாதமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். மரியாதையும் பதவியும் கௌரவமும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.

5. தனுசு ராசி (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு பணியிடத்திலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும், நல்ல செய்திகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் வேலையில் வெற்றி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2025 வரை அட்டகாசமான ராஜயோகம், தொட்டதெல்லாம் வெற்றி!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News