குருவுடன் ராகு இணைந்தால் ஏற்படுவது குரு சண்டாளா யோகமா இல்லை தோஷமா?

Guru Chandal Yog 2024: குரு மற்றும் ராகுவின் சேர்க்கை குரு சண்டாள யோகத்தை உருவாக்கும், அது யாரை எவ்வாறு பாதிக்கும்? சுப கிரகத்துக்கும், நிழல் கிரகத்திற்குமான தொடர்பு வினையை போக்குமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 25, 2024, 08:49 AM IST
  • சுப கிரகத்துக்கும் நிழல் கிரகத்திற்குமான தொடர்பு
  • குரு சண்டாள யோகம்
  • குருவுடன் ராகு இணைந்தால் உருவாகும் யோகம்
குருவுடன் ராகு இணைந்தால் ஏற்படுவது குரு சண்டாளா யோகமா இல்லை தோஷமா?  title=

சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். கிரகங்களின் இந்த இயக்கத்தால், பல கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவதும் பிரிவதுமாக மாறும் பெயர்ச்சிகள், அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது போன்ற மாற்றங்களில் மிக முக்கியமானது வியாழனுடன் ராகு இணைவது ஆகும். குருவுடன், ராகு இணையும் போது ‘குரு சண்டாள யோகம்’ உருவாகிறது.

குரு சண்டாள யோகம்/தோஷம்

 

இந்த தோஷம் மிக நீண்ட காலத்திற்கு அதாவது ஒரு வருடத்திற்கு  உருவாகிறது. நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான், செல்வம், செல்வாக்கு, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் என மனிதர்களுக்குத் தேவையான அத்தனை நன்மைகளையும் செய்பவர். எனவேதான் குரு ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

வியாழன் மற்றும் ராகு இடையே சூரிய குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும் போது உருவாகும் யோகம் இது. ஜாதகத்தில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் குரு சண்டாள யோகம் உருவாகும். ஒரு ராசியில் குருவும் ராகுவும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று சொல்வார்கள்.

குரு பகவானுடன் சனி சேர்ந்திருந்தாலும் குரு சண்டாள யோகம் உண்டாகும். குரு பகவானை சனி பார்த்தாலும் குரு சண்டாள யோகம் உண்டாகும். . குரு ஒருவரின் ராசி அல்லது லக்னத்தைப் பார்த்தால் அது வலிமையானதாக இருக்கும். குருபகவான் வலிமையானவராக இருந்தால் அது கோடீஸ்வர யோகத்தை தரும்.

மேலும் படிக்க | தைப்பூச நன்னாளில் சந்திரன் யாருக்கு சாதகமாக இருப்பார்? எந்த ராசிக்கு பாதிப்பு?

குரு சண்டாள யோகத்தில் பிறந்தவர்களின் இயல்பு

குரு சண்டாள யோகத்தில் பிறந்தவருக்கு சமயப் பணிகளில் நம்பிக்கை குறைவாக இருக்கும். மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் தர்க்கம் செய்து, ஆராய்ந்து அறிந்தே ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்வார்கள். பொதுவாக  நாத்திக உணர்வு கொண்ட இவர்கள், பெரும்பாலும் தத்துவங்களை பேசுபவர்களாக இருப்பார்கள்.

குருவுடன் ராகு அல்லது சனி இணைவதால் உண்டாகும் குரு சண்டாள யோகம், ஆக்கப்பூர்வமாக இருக்கும்போது யோகம் என்றும், தீமைகளை செய்து கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கும்போது, குரு சண்டாள தோஷம் என்றும் அறியப்படுகிறது

குரு சண்டாள தோஷம் இருப்பவர்களுக்கு போதை மற்றும் உடலுக்கு தீமை ஏற்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுடன் இணைப்பு இருக்கும். பிற கலாசாரத்தை கொண்டவர்களுடன் நட்பு இருக்கும். தவறானவர்களுடன் இணைந்து, எதிர்மறையாய் செயல்படும் வாய்ப்பையும் குரு சண்டாள தோஷம் கொடுக்கிறது.  

மேலும் படிக்க | 30 ஆண்டுக்குப் பின் கும்ப ராசியில் அபூர்வ சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

சரி மற்றும் தவறுக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாத குரு சண்டாள தோஷம், தவறான மற்றும் மோசமான வேலையைச் செய்வதில் ஒருபோதும் தயக்கத்தைக் கொடுக்காது. அத்துடன், அதை நியாயப்படுத்தும் வாதங்களையும் முன் வைக்கும் ஆற்றலைக் கொடுக்கும்.

விதி மீறல் செய்தாவது தங்கள் வேலையை மட்டும் செய்து கொள்ளும் இவர்களுக்கு திருமணத்தில், தாம்பத்திய சுகம் மற்றும் உறவு மிகவும் சுகிக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, கல்லீரல் மற்றும் வயிற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 1 ஆண்டுக்கு பிறகு சனியின் வீட்டில் சூரியன் உச்சம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News