Chidambaram Natarajar Aani Abhishekam : தில்லை நடராஜர் ஆனந்த திருநடனம் நிகழ்த்திய ஆனி மாத உத்தர நட்சத்திரத்தன்று ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் நடைபெறுகிறது. ஆனி திருமஞ்சன விழா, ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று தொடங்கிவிட்டது. பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் ஆனி திருமஞ்சனத்தின்போது, யாகங்கள் நடைபெற்று, உத்ஸவ நாயகர்கள் நாதஸ்வர இசையுடன் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் வீதியுலா வருவார்கள். திருவிழாவின் பத்தாம் திருநாள் நாளை ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் நடைபெறுகிறது. அதற்கு பிறகு, 13ம் தேதியன்று (13.07.2024, சனிக்கிழமை) முத்துப்பல்லக்கில் வீதியுலா வருவார்.
ருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் சகல திரவிய அபிஷேகஙள் நடைபெற்ற பிறகு, பலவித மலர்களால் நடராஜருக்கு புஷ்பாஞ்சலி எனும் அபிஷேகம் செய்யப்படும்.
நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வருவார்கள். அதன்பிறகு மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்சபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் ஆனித் திருமஞ்சன மகாதரிசனத்தை பார்க்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள்.
ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளிய பிறகு, தில்லையில் குடி கொண்டிருக்கும் சபெசருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த மகா அபிஷேகம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும். இறைவனை தேவர்கள் வழிபடும் பிரம்ம முகூர்த்த வேளையில் திருமஞ்சனம் நடைபெறும். ஆனி திருமஞ்சனத்தில் நள்ளிரவு நடராஜ ஜோதி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. அபிஷேக பிரியருக்கு ஆனி மாதத்தில் திருமஞ்சனம் சிறப்பாக செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு, ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை பார்க்க கனக சபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்தனர். நடராஜர் கோயிலில் உள்ள மூலவர் வெளியே வருவதால் பாதுகாப்பு கருதி கனக சபை மீது பக்தர்கள் ஏற தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வந்தனர். இந்த நிலையில் கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
சிதம்பரத்தில் மட்டுமல்ல, அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனை வணங்கும் திருநாள் ஆனி மாத உத்தர நட்சத்திர நாள் ஆகும். பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் திகழும் சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிறப்பு அபிஷேகங்களை காண புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இந்த அபிஷேகத்தை தரிசிப்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, சிவனின் திருவருள் முழுவதுமாக கிடைக்கும். வேண்டிய வரங்களை சிவ பெருமான் அருள்வார். இந்த ஆண்டு ஆனி திருமஞ்சனம் ஜூலை 12 ம் தேதி நாளை நடைபெறுகிறது. நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம் உள்ளதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சிவனை பூஜிக்கலாம்.
தில்லையில் திருநடம்புரியும் சித்சபேசரின் திருநடன திருக்காட்சியை ஆனி திருமஞ்சனத்தின்போது பார்த்தால், அடுத்த பிறவி இல்லை என்பது ஐதீகம். வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தில்லை நடராஜரின் ஆனந்த நடனத்தை கண்டுகளிப்போம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ