சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... குடும்பத்தில் மகிழ்ச்சி

Sukran Peyarchi Palangal: மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இதனால் பிரகாசமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2024, 12:37 PM IST
  • சுக்கிரனின் ராசி மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.
  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... குடும்பத்தில் மகிழ்ச்சி title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகின்றது. ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தம நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என கிரகங்களில் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இதனால் சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 

கிரகங்களில் சுக்கிரன் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின் படி, செல்வம், புகழ், செழிப்பு, பேச்சாற்றல், அறிவாற்றல், புத்திக்கூர்மை ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் மனிதர்களின் வாழ்வில் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுபமான இடத்தில் இருந்தால், அவர் வாழ்வில் பல வித வெற்றிகளை காண்கிறார். சுக்கிரன் ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 11.44 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இதனால் பிரகாசமாகும். இந்த ராசிக்காரர்கள் இந்த காலத்தில் அதிகப் பணம் சம்பாதிப்பார்கள். வாழ்க்கையில் பல வித முன்னேற்றங்களை அடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

மேஷ ராசியில்தான் சுக்கிரன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இப்போது நல்ல காலம் ஆரம்பம் ஆகும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். பண வரவு அதிகமாகும். குடும்ப உறவுகளும் வலுவடையும். குடும்பத்தில் ஏதேனும் உள் தகராறு இருந்தால் அது முடிவுக்கு வரும். திருமண வாழ்வில் இருந்த கஷ்டங்கள் விலகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு மேஷத்தில் சுக்கிரனின் ராசி மாற்றத்தால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு ஏப்ரல் 24க்கு பிறகு விரும்பிய வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நேரம் நன்றாக இருக்கும். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மாத சம்பளம் அதிகரிக்கும் என்பதால் பொருளாதார நிலை மேம்படும். 

மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்

துலாம் (Libra)

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவடையும். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்னும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், இந்த நேரத்தில் அதைத் திருப்பிச் செலுத்துவதில் வெற்றி பெறலாம்.

மகரம் (Capricorn)

சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வரும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். நீங்கள் ஏதாவது பெரிய முதலீடு செய்ய நினைத்திருந்தால் அதை இப்போது செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நிலவி வந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News