ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம்.. வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Rahu Ketu Peyarchi: ராகு கேது பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இவற்றால் அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 8, 2023, 08:02 AM IST
  • மீன ராசியில் ராகு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும்.
  • எதிர்பாராத நிதி ஆதாயம் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
  • நீங்கள் சில நல்ல செய்திகளையும் இந்த நேரத்தில் பெறக்கூடும்.
ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம்.. வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

ராகு கேது பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட நம்பிக்கைகளின்படி, மற்ற கிரகங்களைப் போபவே, ராகுவும் கேதுவும் ஒரு குறிபிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. தற்போது ராகு மேஷ ராசியிலும் கேது துலா ராசியிலும் உள்ளனர். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ராகுவும் கேதுவும் 30 அக்டோபர் 2023 அன்று தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களின் ராசி மாற்றம் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நடக்கிறது. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. மேலும் இவை எப்போதும் வக்ர நிலையிலேயே, அதாவது தலைகீழ் இயக்கத்திலெயே இயங்குகின்றன.

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு கேது பெயர்ச்சியின் (Rahu Ketu Transit) தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இவற்றால் அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும். இவர்களது வாழ்விக் சுபிட்சம் குடிகொள்ளும், பண வரவு அதிகரிக்கும். ராகு கேது பெயர்ச்சியால் சாதகமான நற்பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ராகு கேது பெயர்ச்சியால் மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசிகள்

மேஷ ராசி (Aries) 

அக்டோபர் 30ஆம் தேதி ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இத்தகைய சூழ்நிலையில், மேஷ ராசிக்காரர்கள் ராகுவின் இந்த பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ராகுவின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், இந்த காலகட்டத்தில், ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | 140 நாட்களுக்குப் பிறகு சனி உச்சம்.. தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

ரிஷப ராசி (Taurus) 

ராகு-கேதுவின் மாற்றம் ரிஷப ராசியினருக்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்தப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இதனுடன், பெயர்ச்சி காலம் முழுவதும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இது தவிர, இந்தக் காலக்கட்டத்தில் முன்பு செய்த முதலீடுகளின் பலனைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

மிதுன ராசி (Gemini) 

மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் பெயர்ச்சி அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ராகு கேதுவின் அருளால் தொழில் வளர்ச்சி இருக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் வணிகத்தில் பெரும் நிதி லாபத்தைப் பெறுவீர்கள். திடீர் நிதி ஆதாயமும் உண்டாகும்.

கன்னி ராசி (Virgo):

மீன ராசியில் ராகு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், எதிர்பாராத நிதி ஆதாயம் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளையும் இந்த நேரத்தில் பெறக்கூடும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள், கூட்டாண்மையில் வேலை செய்துகொண்டிருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். 

தனுசு ராசி (Sagittarius)

ராகு-கேதுவின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தைத் தரும். வணிக வகுப்பினருக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் சிறப்பான லாபம் கிடைக்கும். பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். நிலம் தொடர்பான விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News