Astro: ஒரு தலைவனாகும் அனைத்து பண்புகளும் ‘இந்த’ ராசிகளுக்கு உண்டு... உங்க ராசி என்ன.!!

Astro Traits:  ஒருவர் பிறந்த ராசி அவரின் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமையில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தலைமைப் பண்புகள் நிறைந்த சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2024, 01:30 PM IST
  • திறமையின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்.
  • காரியங்களை சாதிக்க வேண்டும் என்ற உறுதியான மன நிலையையும், மற்றவர்களை தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் வல்லவர்கள்.
  • ஆற்றல் மிக்கவர்களாகவும், தங்கள் இலக்குகளை அடைவதில் மிகவும் தீவிரமானவர்களாகவும் உள்ளனர்.
Astro: ஒரு தலைவனாகும் அனைத்து பண்புகளும் ‘இந்த’ ராசிகளுக்கு உண்டு... உங்க ராசி என்ன.!! title=

Astro Traits: மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து 12 ராசிகளும் தங்களுக்கே உரிய இயல்புகள், குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். ஒருவர் பிறந்த ராசியின் மூலம் அந்த நபரின் இயல்பு, ஆளுமை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டவர்களாகவும், பிறப்பிலேயே தலைவர்களாகவும் விளங்கும் சில ஆண் ராசிகளை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை அடைந்து அனைவருக்கும் தலைவனாக விடுவார்கள். அத்தகைய தலைமைத்துவ குணம் கொண்டவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

மேஷ ராசி

மேஷத்தின் அதிபதி செவ்வாய், தைரியம் மற்றும் மன உறுதிக்கு காரணமான கிரகம். இந்த ராசிக்காரர்கள் மீது செவ்வாய் கிரகத்தின் தாக்கம் இருப்பதால், அவர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும், தங்கள் இலக்குகளை அடைவதில் மிகவும் தீவிரமானவர்களாகவும் உள்ளனர். இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் எல்லா வகையான சூழ்நிலைகளையும் சமாளிக்க தயாராக உள்ளனர். அற்புதமான முடிவெடுக்கும் திறன்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இது வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் காரியங்களை சாதிக்க வேண்டும் என்ற உறுதியான மன நிலையையும், மற்றவர்களை தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் வல்லவர்கள். முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ராம் மனோகர் லோஹியா போன்றோர் இந்த ராசியில் பிறந்து தங்கள் துறையில் சிறந்து விளங்குகிறார்கள்.

மிதுன ராசி

மிதுன ராசியின் அதிபதி புதன் கிரகம். அவர் புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலை வழங்கும் கிரகம். இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிரகத்தின் ஆதிக்கம் சிறப்பாக உள்ளது, இதன் காரணமாக புதுமையான விஷயங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யும் திறன், அதாவது தாங்கள் பணிபுரியும் துறையில் பன்முகத் திறமை கொண்டவர்கள். அவர்களின் திறமை காரணமாக, அவர்கள் வெற்றியின் படிகளில் விரைவாக ஏறுகிறார்கள். திறமையின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்.யோகி ஆதித்யநாத், நிதின் கட்காரி,  ராகுல் காந்தி, லட்சுமி மிட்டல், லாலு பிரசாத் யாதவ், குமார் மங்கலம் பிர்லா போன்ற பலர் இந்த ராசியில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்

கடக ராசி

கடக ராசியின் அதிபதி சந்திரன், உறுதியான மன நிலையைக் கொடுக்கும் கிரகம். இந்த இராசியில் பிறந்த ஆண்கள் தெளிவான மன நிலையையும் கொண்டுள்ளனர் மற்றும் அங்கும் இங்கும் அலைய மாட்டார்கள், இதன் காரணமாக அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடிகிறது. அவர்கள் மிகவும் வலுவான தலைமைத்துவ திறன்களைக் கொண்டுள்ளனர். அவர்களின் மனம் செய்யப் போகும் பணிகளை பற்றி மிகவும் தெளிவான மன நிலையைக் கொண்டிருக்கும். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் துறையில் சிறந்த பெயரைப் பெறுகிறார்கள். இயல்பிலேயே மிகவும் வலிமையானவர்களாகவும் உறுதியானவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.  கௌதம் அதானி, ராஜ்நாத் சிங், பிவி நரசிம்மராவ், மகேந்திர சிங் தோனி, ஹர்பஜன் சிங், அகிலேஷ் யாதவ், பூபேந்திரபாய் படேல், ரன்வீர் சிங்,  போன்ற பல ராசிக்காரர்கள் கடக ராசியில் பிறந்தவர்கள்.

கன்னி ராசி

கன்னி ராசியின் அதிபதி புதன் கிரகம், அவர் புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலுக்கான கடவுள். இந்த ராசிக்காரர்கள் புதன் கிரகத்தின் தாக்கத்தால் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெறுவார்கள். அவர்கள் எப்போதும் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார்கள். தங்களின் வேலையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியை அடைகிறார்கள். இவர்களின் பேச்சுக்கள் மற்றவர்கள் மனதில் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். இந்த ராசிக்காரர்களின் சிறப்பு என்னவெனில், ஆபத்துகள் மற்றும் தோல்விகளைக் கண்டு பயப்படாமல், அவர்கள் உழைத்து வெற்றியை அடைகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, சுப்பிரமணியன் சுவாமி, பவன் கல்யாண், புஷ்கர் சிங் தாமி போன்ற பலர் கன்னி ராசியில் பிறந்தவர்கள்.

துலாம் ராசி

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். மகிழ்ச்சி மற்றும் ஆடம்பர வாழ்க்கையை கொடுக்கும் அதிபதி. இந்த ராசி ஆண்கள் மீது சுக்கிரன் கிரகத்தின் தாக்கம் இருப்பதால், அவர்கள் தலைவர்களாகவே பிறந்து எப்போதும் ராஜ வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களைச் சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். இந்த மக்கள் தங்களைத் தங்கள் தலைவவனாக கருதுகிறார்கள். அவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும், அவர்கள் அங்கு நம்பர் 1 ஆக விளங்குவார்கள். இந்த ராசிக்காரர்கள் வெற்றியின் உச்சிக்கு கொண்டு செல்லும் மன உறுதி கொண்டவர்கள். மகாத்மா காந்தி, ஏபிஜே அப்துல் கலாம், ஜெயபிரகாஷ் நாராயண், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், தேஜஸ்வி சூர்யா, லால் பகதூர் சாஸ்திரி, நவீன் பட்நாயக், அமித் ஷா, அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக் போன்ற பலர் துலாம் ராசியி பிறந்தவர்கள்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். ஆற்றல் மிக்க, சக்தி வாய்ந்த பலவற்றிற்கு காரணமான கிரகமாகும். இந்த ராசி ஆண்கள் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இலக்கை அடையும் வரை அவர்கள் ஓய்வெடுக்க மாட்டார்கள். இந்த மக்கள் தங்கள் சொந்த  திறமையினால் தலைவர்களாவார்கள். இயற்கையாகவே தலைவர்களாக பிறந்தவர்கள். தங்கள் வேலையை எப்படிச் சாதித்துக் கொள்வது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும், இந்த வகையான குணம்தான் வெற்றிக்கு வழிவகுக்கும். ஜவஹர்லால் நேரு, ஷாருக் கான், தேஜஸ்வி யாதவ், சர்தார் வல்லபாய் படேல், சிராக் பாஸ்வான், கமல்ஹாசன், எல்.கே.அத்வானி, விராட் கோலி போன்ற பலர் விருச்சிக ராசியிலிருந்து வந்தவர்கள்.

மகர ராசி

மகர ராசியின் அதிபதி சனி. நீதியின் கடவுள் மற்றும் கர்மத்திற்கு காரணமான கிரகம். இந்த இராசி ஆண்கள் மீது சனிதேவன் ஆதிக்கம் செலுத்துகிறார். இதன் காரணமாக அவர்கள் எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள், சும்மா உட்கார மாட்டார்கள். அவர்களின் கூர்மையான அறிவுத்திறன் காரணமாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைகிறார்கள். அவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்களாகவும், எப்பொழுதும் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் பிறறிடமிருந்து எப்படி வேலைகளை எவ்வாறு வாங்குவது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அடல் பிஹாரி வாஜ்பாய், தில்ஜித் தோசன்ஜ், ரத்தன் டாடா, முரளி மனோகர் ஜோஷி, கபில்தேவ்,சல்மான் கான்  போன்ற பலர் மகர ராசியில் பிறந்தவர்கள்.

மீன ராசி

மீனத்தின் அதிபதி குரு பகவான். முன்னேற்றம் மற்றும் அறிவாற்றலை வழங்கும்ச்ச் கிரகம். மீன ராசிக்காரர்கள் மீது வியாழனின் செல்வாக்கு காரணமாக, அவர்கள் எப்போதும் சிறந்த நிர்வாகத் திறன் மற்றும் அணியை வழிநடத்தும் திறனைக் கொண்டுள்ளனர். இந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் மனதில் முடிவெடுத்ததை முடித்த பின்னர் அதனை நிறைவேற்றும் வரை ஓய மாட்டார்கல். அவர்கள் அனைவரையும் மதித்து முன்னேறுகிறார்கள். எனவே எல்லோரும் அவர்களை நம்புகிறார்கள். திறனையின் காரணமாக அவர்கள் எல்லா இடங்களிலும் தனக்கென ஒரு இடத்தை அடைகிறார்கள். அமீர்கான், நிதிஷ் குமார், சிவராஜ் சிங் சவுகான் போன்ற பலர் மீன ராசியில் பிறந்தவர்கள்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பிரேதசாப தோஷம் என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு ஏற்படும்? விமோசனங்களும் பரிகாரங்களும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News