Astro: ஏழரை நாட்டு சனியிலும், சனி பகவானின் அருளைப்பெறும் ‘3’ ராசிகள்!

சனி தேவன் தனக்கு மிகவும் பிடித்த ராசிகளை துன்பத்தில் ஆழ்த்துவதில்லை. அவர்களுக்கு மிகுந்த செல்வத்தையும் வளமான வாழ்க்கையையும் வழங்குகிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 16, 2022, 11:08 AM IST
  • சனி பகவானுக்கு பிடித்தமான ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
  • சனி தனது மகாதசையின் போது கூட தனக்கு பிரியமான ராசிகள் மீது கருணை மழை பொழிகிறார்.
  • சனிபகவான் எப்பொழுதும் கருணையுடன் இருப்பதோடு, சுப பலன்களை அள்ளி வழங்குகிறார்.
Astro: ஏழரை நாட்டு சனியிலும், சனி பகவானின் அருளைப்பெறும் ‘3’ ராசிகள்! title=

சனி தேவன் செயலுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பவர். எனவே அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி தேவரின் வக்ர பார்வை வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்கும் எனக் கூறுவதுண்டு அதே நேரத்தில் சனியின் கருணை மிகவும் வறுமையில் இருப்பவரையும் அரசனாக்குகிறது. சனி தனது மகாதசையின் போது தனக்கு பிரியமான ராசிகள் மீது கருணை மழை பொழிகிறார். அதாவது இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியிலும் கூட பாதிப்பு அதிகம் இருக்காது. இந்த ராசிகளிடம் சனிபகவான் எப்பொழுதும் கருணையுடன் இருப்பதோடு, சுப பலன்களை அள்ளி வழங்குகிறார். பொதுவாக சனியின் வக்ர பார்வையினால் பாதிப்பை சந்திப்பவர்கள், சனியின் கோபத்திலிருந்து விடுபட அருகிலுள்ள கோவிலில் உள்ள நவக்கிரக சன்னிதிக்கு சென்று, ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் எள் தீபம் ஏற்ற வேண்டும். இது தவிர, சனி சாலிசா பாராயணம் செய்தல், சனி பகவானுக்கான ஸ்தோத்திரங்களை கூறுதல் போன்றவையும் பல நன்மைகளைத் தரும். சனி பகவானுக்கு பிடித்தமான ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

சனி பகவானுக்கு மிகவும் விருப்பமான ராசிகள்

துலாம்: துலாம் ராசியில் ஏழாவது ராசியாகும். துலாம் ராசியில் சனி பகவான் எப்போதும் உச்சமாக இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சுப பலன்களை அள்ளித் தருகிறார். இது தவிர, துலாம் ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், உணர்ச்சிக்கு மதிப்பு கொடுப்பவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள் மற்றும் நேர்மையானவர்கள். மேலும், அவர்கள் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். சனி தேவன் ஒரு நபரின் இந்த குணங்கள் காரணமாக மிகவும் விரும்புகிறார். எனவே அவர் எப்போதும் இந்த நபர்களிடம் கருணையாக இருப்பார். சனியின் அருளால் இவர்களின் அதிர்ஷ்டம் எப்போதும் இவர்கள் துணை நிற்கிறது.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

மகரம்: மகர ராசியின் அதிபதி சனி தேவன். எனவே அவர் எப்போதும் இந்த ராசிக்காரர்களிடம் அன்பாக இருப்பார். சனிபகவானின் செல்வாக்கால், அவர் எப்போதும் நிம்மத்தியான வாழ்க்கையை வாழுகிறார்கள். மகர ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், மற்றவர்களுக்கு உதவுவார்கள், தைரியத்தை இழக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். இந்த குணங்கள் காரணமாக, மற்ற ராசிக்காரர்களைப் போல ஏழரை நாட்டு சனியின் போது கூட, இவர்கள் பெரிய அளவில் கஷ்டப்பட மாட்டார்கள்.

கும்பம்: மகர ராசியைப் போலவே சனி தேவர் கும்ப ராசிக்கும் அதிபதி ஆவார். எனவே, கும்ப ராசிக்காரர்களுக்கும் சனிபகவான் எப்போதும் அருள்பாலிக்கிறார். இவர்களுக்கு சனியின் தோஷம் இருந்தாலும், மிகக் குறுகிய காலமே அவர்களை இந்து பாதிக்கும். சனி தேவரின் அருளால், இந்த ராசிக்காரர்கள் மிகவும் உன்னதமானவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் பொறுமையானவர்கள். அவர்கள் வாழ்வில் பணத்துக்குப் பஞ்சம் இருக்காது. வியாபாரம் செய்தால் நிறைய பணம் கிடைக்கும். சமூகத்தில் மிகுந்த மரியாதையையும் பெறுகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News