நவக்கிரகங்களில் திருமணத்திற்கும், நம்முடன் பயணிக்கும் உறுப்பினர்கள் அமைவதையும் நிர்ணயிப்பது ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் இடம் தான். ஜாதகத்தில், ஒருவரின் ஜென்ம லக்னத்தில் இருந்து 1, 2, 4, 7, 8 மற்றும் 12 வது வீடுகளில் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தோஷம் பொதுவாக திருமண வாழ்க்கையை பாதிக்கிறது, தடைகள் மற்றும் மன நிம்மதியை குலைக்கிறது. குடும்பத்தில் பிரச்சனை, பிரிவினை மற்றும் விவாகரத்துக்கு வழிவகுக்கிறது. செவ்வாய் தோஷம் கடுமையாக இருந்தால், தொழில் தடை, நிதி இழப்பு என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
செவ்வாய் தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
இருப்பினும், செவ்வாய் தோஷத்தின் தீமைகளைப் பற்றி ஒருவர் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் செவ்வாய் கிரகம் கொடுக்கும் கெடு பலன்களை நிவர்த்தி செய்ய பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் சில...
செவ்வாய் தோஷ ஜோடிகளுக்கு திருமணம்
திருமணம் செய்யும்போது, ஆண் பெண் என இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருந்தால், அது தோஷ நிவர்த்தியாகிவிடும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெறலாம்.
மேலும் படிக்க | நவம்பர் 11 சுக்கிரன் பெயர்ச்சியால் மனம் வருந்தப் போகும் ‘2’ ராசிகள்! பரிகாரம் இது
வாழைமரத்துடன் திருமணம்
ஒருவருக்கு செவ்வாய் தோஷம் கடுமையாக இருந்தால் அவர்களுக்கு வாழை மரத்துடன் திருமணம் செய்து வைப்பது செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரம் ஆகும். இந்த சடங்கை செய்த பிறகு, நதியில் குளித்துவிட்டு, உடுத்தியிருந்த ஆடைகளை நீரில் விட்டுவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும். அப்போது தோஷம் நிவர்த்தியாகிவிடும்.
கடவுளுடன் திருமணம்
கடவுள் விஷ்ணுவின் வெள்ளி / தங்க சிலையை திருமணம் செய்து கொள்ள வேண்டும். கடவுளை திருமணம் செய்துக் கொள்வதால், அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும்.
ஜாதகத்தில் செவ்வாய் இடம்
ஒருவருடைய ஜாதகத்தில் முதல் வீட்டில் மேஷம் இருந்து, இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால், அதை செவ்வாய் தோஷமாக கருத வேண்டியதில்லை என்றும் நம்புகின்றனர். ஏனென்றால் சொந்த வீடான மேஷத்தில் செவ்வாய் இருந்தால், அது தானாகவே தோஷ நிவர்த்தி பெற்றுவிடும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
விரதம்
செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது பயனுள்ள பரிகாரமாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் கடைப்பிடிப்பவர்கள், துவரம் பருப்பை மட்டுமே சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | நவம்பர் ராசிபலன்: யாருக்கு ‘சூப்பர்’... யாருக்கு ‘சுமார்’; பலன்கள் கூறுவது என்ன
மந்திர உச்சாடனம்
மாங்கல்ய நபர்கள் செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நவகிரக மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அவர்கள் காயத்ரி மந்திரத்தை ஒரு நாளைக்கு 108 முறை ஜெபிக்க வேண்டும்.
கோவில்களில் பூஜைகள்
நவகிரக ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறந்த பரிகாரமாக இருக்கும். செவ்வாய் கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடவும். வெண்கலம் மற்றும் இனிப்புகளை தானம் செய்வது மற்றும் கோவிலில் நெய் தீபம் ஏற்றுவதும் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்யும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ