ஆடி கிருத்திகையில் ஆடல்வல்லானின் மகன் மாலோன் மருகன் கார்த்திகேயனை வணங்குவோம்!

Aadi Krithigai : தன்னை வளர்த்த அன்னையர் மீது மாளாத அன்பு வைத்துள்ள முருகனை, கிருத்திகையில் வழிபட்டால் சகல செல்வங்களும் கிட்டும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2024, 07:41 PM IST
  • அன்னையரை வணங்கும் முருகனை வணங்க உகந்த ஆடி கிருத்திகை!
  • அன்னையர் மீது மாளாத அன்பு வைத்துள்ள முருகன்
  • சகல செல்வங்களும் தரும் ஆடி கிருத்திகை
ஆடி கிருத்திகையில் ஆடல்வல்லானின் மகன் மாலோன் மருகன் கார்த்திகேயனை வணங்குவோம்! title=

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீகத்தில் முக்கியமான மாதம் ஆகும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடி பதினெட்டு, ஆடி பூரம், ஆடி பௌர்ணமி, நாக பஞ்சமி, வரலட்சுமி விரதம் என இந்த மாதத்தில் நோன்புகளும் முக்கிய பூஜைகளும் அனுசரிக்கப்படுகிறது. அதிலும் சைவ மதத்தில் ஆடி மாதம் மிகவும் முக்கியமானது. சிவபெருமானுக்கு வட இந்தியாவில் காவடி எடுத்து வழிபட்டால், தென்னிந்தியாவில் அம்மனுக்கு சிறப்பான மாதம் ஆடி. அதிலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நாள். இன்று ஆடிக்கிருத்திகை நாளில் முருகனுக்கு விரதம் வைபப்து வழக்கம். 

கார்த்திகேயன்
சிவனின் நெற்றிக்கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பெறிகள் சரவண பொய்கையில் சென்று விழ, அவற்றில் இருந்து ஆறு குழந்தைகள் உதித்தன. உதித்த குழந்தைகள் தாமரை மலர்களில் தோன்றிய சிவனின் அம்சமான குழந்தைகளை கார்த்திகை பெண்கள் தூக்கியதும், ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஒரே குழந்தையாகின. கார்த்திகை பெண்கள் வளர்த்த அந்த சிவகுமாரன் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுகிறார்.

கார்த்திகை பெண்கள்
தனது மைந்தனை வளர்த்தெடுத்த கார்த்திகையை  நட்சத்திரங்களில் ஒன்றாக சிவன் வரம் அளித்தார். அதனால் தான், கார்த்திகேயனை வளத்த கார்த்திகை பெண்கள், 27 நட்சத்திரங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளனர். கார்த்திகையை, கிருத்திகை என்றும் அழைக்கிறோம்.

தன்னை வளர்த்த அன்னையர் மீது மாளாத அன்பு வைத்துள்ள முருகனை, கிருத்திகையில் வழிபட்டால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. அதிலும் ஆடி கிருத்திகையில் முருகனை வழிபட்டால், கேட்ட வரத்தை எல்லாம் தந்தருவான்...

மேலும் படிக்க | Lord Shiva: சிவ பூஜையில் செய்யக்கூடாத விஷயங்கள்: சிவனுக்கு உவப்பில்லா பொருட்கள்

முருகனுக்கு ஆடிக்காவடி

எனவே தான் ஆடி கிருத்திகை அன்று முருகன் ஆலயங்களில் கூட்டம் அலைமோதும். காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து முருகப்பெருமனை வணங்குவது வழக்கம். 
 
ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதைத் தவிர, முருகனுக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து காலை மாலை வேளைகளில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், வேல் விருத்தம், மயில் விருத்தம் திருப்புகழ் என பாடி முருகனை துதித்தால் அனைத்து கவலைகளும் அகலும்.  நோய்நொடிகள் விலகி, தீவினைகள் அணுகாமல் முருகன் காப்பான். 
 
வறுமை, கடன் தொல்லைகள் நீங்கி குடும்பத்தில் செழிப்பு ஏற்பட்டு சந்தோஷம் பெருகி அமைதியாக வாழ முருகன் உதவுவார். பகைவர்களும் பகைமையை நீக்கி நண்பர்களாவார்கள், மன நிம்மதியும், காரியத் தடைகள் அகலும். கிருத்திகையில் விரதமிருத்து மனமார வேண்டுவோருக்கு வேண்டியதை எல்லாம் வழங்கி வாழவைக்கும் முருகனை ஆடி கிருத்திகையில் வணங்கி வளம் பெறுவோம்.
 
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து கார்த்திகேயனை வழிபடுபட்டால், அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த குடும்பம், குணமுள்ள குழந்தைகள் என வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News