உலகிலேயே சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சாலை விபத்துகளில் சிக்கி, உடல் உறுப்புகளை இழக்கின்றனர். அவற்றில் பலர் உயிரிழப்பையும் சந்திக்கின்றனர். சாலை விதிகளை பின்பற்றாதது, கவனக்குறைவாக வாகனத்தை இயக்குவது உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம். சாலையில் செல்பவர்கள் அனைவருமே சாலை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். யார் ஒருவர் தவறு செய்தாலும், அப்பாவியாக எதிரில் வருபவர்களின் உயிரையும், அவர்களின் இழப்புக்கு குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும்.
மேலும் படிக்க | சிறப்புத் திறன் கொண்ட நாய்களின் சிறப்பான செயல்கள்! வைரல் வீடியோ
குறிப்பாக, அதிவேக பைக்குகளில் பயணிக்கும் இளைஞர்கள் சிலர் சாகசங்கள் செய்வதற்காக சில விபரீத முயற்சிகளில் இறங்குகின்றனர். கைகளை விட்டுவிட்டு பைக் ஓட்டுவது, வாகனங்கள் மீது ஏறி நின்று பைக்கை இயக்குவது உள்ளிட்ட விபரீத முயற்சிகளை செய்கின்றனர். சிலர் இன்ஸ்டாகிராமில் ரீலஸ் போடுவதற்காக நெரிசல் மிக்க சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். இப்படி, வாகனத்தை இயக்கிய இளைஞர் ஒருவர் தான் மிகக் கொடிய விபத்தில் சிக்கியுள்ளார்.
காவல்துறை அதிகாரி ஒருவர் இணையத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவில், அந்த இளைஞர் நெரிசல் மிக்க சாலையில் வாகனத்தை மிக வேகமாக இயக்குகிறான். அந்த வாகனத்தை அவ்வளவு வேகமாக இயக்குவதில் அவ்வளவு ஆனந்தத்துடன் செல்லும் அவருக்கு, அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.வேகமாக செல்லும்போது பைக்கை கட்டுப்படுத்த முடியாமல், நிலைதடுமாறி சாலையின் நடுவிலேயே கீழே விழுகிறார்.
Facebook & Instagram போன்ற
சமூகவளைதளத்தில் like வாங்குவதற்கு சாலையில்
சாகசம் செய்யாதீர்....
நான்கு அடி சாலையில்
அடங்கமறுத்தால் ஆறு
அடிமண்ணுக்குள் அடங்கநேரிடும்... pic.twitter.com/q02M0GesFx— Suguna Singh IPS (@sugunasinghips) April 23, 2022
பைக் சுமார் பத்து அடி தூரத்துக்கு சென்று விழுகிறது. அந்த இளைஞர் பலமுறை திரும்பி எழு முடியாமல் சாலையிலேயே கிடக்கிறார். உயிரிழந்திருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இந்த வீடியோவுக்கு கீழ் விலை மதிப்பு மிக்க உயிரை இதுபோன்ற சாகசங்களால் இழந்துவிடாதீர்கள் என அந்த காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
மேலும் படிக்க | படுக்கையில் மனைவி செய்த வேலை, கடுப்பான கணவன்: வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR