இங்கிலாந்து கார்ன்வால் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பெண் ஒருவர் கீரை வாங்கி உள்ளார். அந்த கீரை பையில் போட்டு கொடுத்துள்ளார் கடை ஊழியர். அப்பொழுது அந்த கீரை பையில் ஒரு சிறிய தவளை இருப்பதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தாள். அந்த பெண்ணின் பெயர் ஷெவ்யான் டால்புட்ட். அவர் சைவ உணவுக்காக கீரை வாங்க சென்ற போது தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தை அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் #YouGetExtraAtAldi என்ற ஹேஸ்டேக் போட்டு, கீரை வாங்கும் போது தவளை கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
What to do when you find a frog in your lettuce?!?!? #YouGetExtraAtAldi pic.twitter.com/EItm2V6NwM
— Shevaughan Tolputt (@Sheloulie) June 30, 2018
இச்சம்பவத்திற்காக அங்காடி நிர்வாகம் அந்த பெண்மணியிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் தங்கள் பணத்தை திருப்பி கொடுப்பதாகவும், தவளை எப்படி கீரைக்குள் வந்தது என்பதை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல் முறை அல்ல, ஏற்கனவே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு பெண் கீரை வாங்கிய பையில் தவளை இருப்பது கண்டுபிக்கப்ட்டது. இந்த தவளையை இந்த பெண்மணி ஒரு செல்லப்பிள்ளை போல வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.