சம்சார சாகரத்தில் விழுவது என்பது இதுதானா: கல்யாண கலாட்டா வீடியோ வைரல்

 திருமணங்களில், மணமகனும், மணமகளும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலாட்டா செய்துக் கொண்டிருப்பார்கள். வேடிக்கைக்கான எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிடுவதில்லை.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 6, 2022, 02:33 PM IST
  • கல்யாணத்தில் தண்ணீரில் விழுந்த மணமக்கள்
  • தண்ணீரில் விழுந்தாலும் அன்பு அணையவில்லை
  • கல்யாண கலாட்டா வீடியோ வைரல்
சம்சார சாகரத்தில் விழுவது என்பது இதுதானா: கல்யாண கலாட்டா வீடியோ வைரல் title=

மணமகள் மணமகன் வீடியோ: திருமணங்களில், மணமகனும், மணமகளும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலாட்டா செய்துக் கொண்டிருப்பார்கள். வேடிக்கைக்கான எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிடுவதில்லை.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருமணத்தில் வேடிக்கையான சூழ்நிலையை உருவாக்குவது சகஜம் தான். ஆனால் மணமகனும், மணமகளும் திருமணத்தில் மிகவும் வேடிக்கையாக, பார்ப்பவர்களை சிரிக்க வைத்தால், சூழ்நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

கண்டிப்பாக இது அனைவருக்கும் சிறிது ஆச்சரியமாகத்தான் இருக்கும். சமூக ஊடகங்களில் சமீபத்திய வைரல் வீடியோவில் இதே போன்ற காட்சியை பார்த்து ரசிக்கின்றனர் நெட்டிசன்கள்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், மணப்பெண், குறும்புச் சிரிப்புடன் மாப்பிள்ளையை நீச்சல் குளத்தில் கீழே தள்ளுகிறார். மணமகளின் இந்த செயலால் விருந்தினர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

மேலும் படிக்க | போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்! 

போட்டோஷூட் நடந்துக் கொண்டிருந்தபோது மணமகனை தள்ளிவிட்டபோது, மணப்பெண்ணும் குளத்தில் விழுந்தார், இதை மணமக்கள் ரசித்து கொண்டாடியதைப் பார்த்த விருந்தாளிகளால் கூட சிரிப்பை நிறுத்த முடியவில்லை. அப்படி என்ன பஞ்சாயத்து? வீடியோவைப் பாருங்கள்

இந்த வீடியோவில் போட்டோஷூட் செய்யும் போது, மணமகனுடன் விளையாடுகிறார் மணமகள். அப்போது விளையாட்டாக மணமகனை தள்ளும்போது, மணமகன், தனது ஜோடியையும் இழுத்துக் கொண்டு குளத்தில் விழுகிறான்.

அடுத்த நொடியே என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, இருவரும் இதை சிரித்து அனுபவிக்கின்றனர். அதனால் தான் இந்த வீடியோ வைரலாகிறது என்று கூட சொல்லலாம்.

மணமகள் மணமகனுடன் உல்லாசமாக இருந்தார்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமண ஆடையில் இருக்கும் மணமக்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று கவலைப்படுகிறீர்களா?  இவ்வளவு விலையுயர்ந்த ஆடைகள் வீணாகிவிடாதா என்ற கவலை எழுகிறதா? ஆம் என்றால் நீங்கள் மிகவும் அப்பாவி.

இன்று, திருமணங்களில் பல நிகழ்வுகள் திட்டமிட்டே செய்யப்படுகின்றன. பார்க்க க்யூட்டாக இருந்தாலும், இதுவும் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் தவிர்க்க முடியவில்லை.

என்ன இருந்தாலும், ஈர ஆடையுடன் போட்டோஷூட் தொடருமா என்ற கேள்விகள் நமக்கு எழுந்தால், அதை தவிர்த்துவிட்டு, இப்படி இக்கட்டான நேரத்திலும் இருவரின் சிரிப்பும் பிணைப்பும் ஆச்சரியமாக இருக்கிறதே என்று நினைக்கலாம். இந்தக் கோலத்தை பார்க்கும் எவராலும் சிரிப்பை அடக்க முடியாது.

இதயங்களை வென்ற மணமகள்
மணப்பெண் புது ஸ்டைலை காட்டிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இந்த வீடியோ Thebridesofindia என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பயனர் இதைப் பற்றி எழுதுகிறார், 'இது அற்புதம்' என்று ஒருவர் கேட்கிறார். 'மொபைல் போன் நன்றாக இருக்கிறது'. இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகள் மற்றும் விருப்பங்களைப் பெற்றுள்ளது. இந்த மணமக்கள் வீடியோ தொடர்ந்து பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News