இணைய உலகில், தினம் தினம், பல வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மனதை நெகிழ வைக்கும் வகையிலான சம்பவங்களை விளக்கும் வீடியோக்கள் மிகுந்த தாக்கத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
கர்நாடக மாநிலம் தும்கூர் தாலுகா குண்டூரில் இச்சம்பவம் நடந்துள்ளது.விலங்குகள் அதன் தாயின் பாலை குடிப்பது வழக்கம். எந்த விலங்கிற்கு பசித்தாலும் அதன் தாயைத் தேடிச் சென்று வயிற்றை நிரப்பி பசியற்றும்.
ஆனால், தும்கூர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த அதிசயம் அனைவரையும் மனம் நெகிழச் செய்துள்ளது. ஒரு கன்றுக்குட்டி நாயிடம் பால் குடிக்கிறது. நாயும் கன்று குட்டியை விரட்டாமல் பசியால் இருக்கும் பசுவின் கன்றுக்கு பால் கொடுக்கிறது. அதோடு, அதனை தனது முகத்தினால் தேய்த்து தனது பாசத்தை வெளிப்படுத்துகிறது. நாய்க்குட்டிக்கும் தாய் பாசம் உள்ளது என்பதற்கு இந்நிகழ்வே சாட்சி. இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேசம் தும்கூர் தாலுகா குண்டூரில் நடந்துள்ளது. பசவராஜா - கீதா தம்பதிகளின் வீட்டில் நடந்துள்ளது.
வைரலாகி வரும் வீடியோவை கீழே காணலாம்:
பொதுவாக, பசுவின் பால் பல குழந்தைகளுக்கு தாய் பாலாக இருந்து வரும் நிலையில், இந்த கன்று குட்டி நாயிடம் பால் குடிப்பது உண்மையில் அதிசயம் தான் என மக்கள் வியக்கின்றனர். நாய் நன்றியுணர்வு கொண்ட விலங்கு மட்டுமல்ல, தாய் பாசம் நிரைந்த விலங்கு என்பதையும் இந்த வீடியோ நிரூபித்துள்ளது எனலாம்.
அந்த வகையில், ஆச்சர்யங்களையும் வியப்புகளையும் அள்ளித் தருவதில் இணைய உலகம் நம்மை ஏமாற்றுவதே இல்லை.
மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR