மழைக் காலம் என்பதால், குடியிருப்புப் பகுதிகளில் பாம்பு தென்படுவது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. ஸ்கூட்டியின் கைப்பிடியிலிருந்து ஒரு நாகப்பாம்பு சீறி பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர், தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்ட இந்த திகிலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ள வீடியோவில், ஸ்கூட்டரின் ஹாண்டில் பாரிலிருந்து பாம்பை படம் எடுப்பதை பார்க்கலாம்.
பாம்பை மீட்பவர் ஹாண்டில் பாரை கபியால் திருப்பியதும் நாகம் வெளிவந்து, படம் எடுத்ததை பார்த்து மக்கள் பயத்தில் உறைந்தனர். பாம்பு தாக்கவும் முயன்றது. ஆனால், பாம்பு பிடிப்பவர், அதனை மிக லாவகமாக, பாட்டிலுக்குள் அடைத்து மூடி விட்டார். மந்திரத்திற்கு கட்டுப்பட்ட மந்திரவாதி போல், பாம்பு தண்ணீர் கேனுக்குள் சென்றுவிட்டது. அவர் தொடர்ந்து 2-3 முறை முயன்று அதனை தண்ணீர் கேனுக்குள் அடைத்து விட்டார்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
Such guests during rains are common...
But uncommon is the method used to rescue it. Never ever try this pic.twitter.com/zS4h5tDBe8— Susanta Nanda IFS (@susantananda3) September 7, 2021
மழையின் போது இத்தகைய விருந்தினர்கள் வருவது சகஜம் தான் ... ஆனால் அதை பிடிக்க இவர் மேற்கொள்ளும் முறை ஆபத்தானது. இதை ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம். ” என இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!
இந்த வீடியோ வைரலாகி, 20,000 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இந்த பதிவிற்கு 1200 க்கும் மேற்பட்ட லைக்குகளும் குவித்துள்ளது. பாம்பை பிடித்தவரின் திறமையை பலர் பாராட்டினாலும், மற்றவர்கள் இது மிகவும் அபாயமான முறை என கருத்து தெரிவித்தனர், மேலும், பாம்பிற்கு இது ஆபத்து என கூறிய சிலர், இதனால் பிளாஸ்டிக் கொள்கலனுக்குள் உள்ள பாம்பிற்கு மூச்சுத் திணறக்கூடும் என்று கூறினர். வேறு சிலர் வேடிக்கையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR