Indian Railways/IRCTC: ரயில் ஓடும் போது ரயிலில் இருந்து கீழே இறங்குவதையோ ரயிலில் ஏறுவதையோ தவிர்க்குமாறு இந்திய இரயில்வே தனது பயணிகளுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கிறது. ஆனாலும், அதிக எண்ணிக்கையிலான ரயில் பயணிகள் இதைச் செய்து விபத்தில் சிக்கிக்கொள்வதை அவ்வப்போது கண்டு வருகிறோம்.
தற்போது ஓடும் ரயிலில் இருந்து இரண்டு பெண்கள் கீழே இறங்கி, அதனால் ஏற்பட்ட விபரீத விளைவை விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள புருலியா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோவை போலீஸ் பாதுகாப்புப் படை (RPF) பகிர்ந்துள்ளது.
சிறிது நேரம் பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில் மீண்டும் வேகமெடுப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. அப்போது பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணி ஒருவர் ரயிலில் ஏறுகிறார். அவரது கூட்டாளி அங்கேயே நின்றுகொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
ரயில் வேகம் பிடிக்கும் போது, திடீரென ஒரு பெண் பயணி ரயிலின் உள்ளிருந்து பிளாட்பாரத்தில் குதிக்கிறார். கீழே குதித்தவுடன் அந்த பெண் தனது சமநிலயை இழந்து விடுகிறார். இந்த தாக்கத்தின் விளைவாக அவர் கீழே விழுந்து விடுகிறார். அவர் வேகத்துடன் கீழே விழுவதை வீடியோவில் காண முடிகின்றது.
வீடியோவில் (Viral Video) இதற்குப் பிறகு தெரியும் காட்சிகளை நம்மால் நம்ப முடியவில்லை. முதல் பெண்மணி கீழே குதித்த உடனேயே மற்றொரு பெண்ணும் ரயிலில் இருந்து குதிக்கிறார்.
ALSO READ:35 வருடம் காதலிக்காக காத்திருந்த ’ரோமியோ’ - 65 வது வயதில் காதலியை கரம்பிடித்தார்
ஆனால், அந்த பெண் மிகவும் ஆபத்தான் நிலையில் கீழே விழுகிறார். ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவரது தலை சிக்கிக் கொண்டது. ரயில் மற்றும் தண்டவாளத்தின் சக்கரங்களுக்கு சில அங்குல தூரத்தில் அந்தப் பெண் விழுந்துவிடுகிறார். இருப்பினும், அந்த பெண்ணின் அதிர்ஷ்டம் மிக நன்றாக இருந்தது. தூரத்தில் நின்றிருந்த ஆர்பிஎஃப் வீரர்கள் துரீதமாக அங்கு வந்து அந்தப் பெண் பயணியை இழுத்துச் சென்று அவரது உயிரைக் காப்பாற்றினர்.
இந்நிலையில், இந்த சம்பவம் நவம்பர் 11, 2021 அன்று நடந்ததாக RPF இன் ஆத்ரா ரயில்வே பிரிவு ட்வீட் செய்துள்ளது. சம்பவத்தின் போது RPF இன் பப்லு குமார், புருலியா ரயில் நிலையத்தில் பணியில் இருந்தார். புருலியா நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து (எண் 22857) பெண் பயணி இறங்க முயன்றதாகவும், ரயில் மற்றும் பிளாட்பாரத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட சிக்கிக் கொண்டதாகவும் அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.
அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ரயில்வே (Indian Railways) ஊழியரின் துணிச்சலை மக்கள் பாராட்டி வருகின்றனர். பல பயனர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண் பயணிகளை கண்டித்துள்ளனர்.
ALSO READ:டயர் பஞ்சராகி நின்ற விமானம்: கைகளால் தள்ளும் பயணிகள்: வைரலாகும் Video
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR