’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ் - வைரல் வீடியோ

வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் சத்தமாக கத்தி மற்ற மாணவர்களுக்கு இந்தி மொழிப்பாடத்தை சொல்லிக் கொடுக்கும் அழகு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 8, 2023, 02:32 PM IST
  • இந்தி கற்றுக் கொடுக்கும் சுட்டிக் குழந்தை
  • சத்தமாக கத்தி கூச்சலிடுகிறது
  • இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோ
’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ் - வைரல் வீடியோ title=

குழந்தை பருவத்தின் அப்பாவித்தனத்தையும், பள்ளி நாட்களின் வேடிக்கையையும் யாரால் மறக்க முடியும். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல், ஜாலியாக இருக்கும் காலம் அது. என்ன செய்கிறோம் என்றெல்லாம் யோசிக்காமல் விரும்பியதை செய்யும் பருவம் அது. காலம் கடத்தும் அந்தக் காலங்களளை யோசித்து பார்த்தால் பசுமை மாறா நினைவுகளுடன் அவை அப்படியே இருக்கும். திரும்பி பார்க்கும்போது, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று அப்போது துளியும் யோசித்திருக்க மாட்டோம். யாராவது உங்களை கிண்டலடிப்பார்கள் என்றெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டோம். அப்படியான ஒரு வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

ஒரு சிறு குழந்தை எதனைப் பற்றியும் கவலைப்படாமல் சக மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். அவர் சொல்லிக் கொடுக்கும் விதம் தான் மற்ற குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. வகுப்பிற்குள் பாடம் நடத்தும் இவரின் பாணியைக் கண்டு நிச்சயமாக நீங்களும் சிரித்து மகிழ்வீர்கள். அந்த வீடியோவில் ஒரு சிறு குழந்தை, வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகளை பழைய பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறது. காமெடி வீடியோ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. அந்த குழந்தை இந்தி எழுத்துகளை எழுத்துக்களை ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்கிறது.

மேலும் படிக்க | புழுதி பறக்க வெறித்தனமாக மோதிக்கொண்ட இரண்டு யானைகள்..வைரல் வீடியோ

அவர் உரத்தக் குரலில் சொல்லிக் கொடுப்பதை மற்றவர்கள் அப்படியே பேசுகின்றனர். அந்த குழந்தையின் செய்கை வகுப்பில் இருக்கும் அனைத்து குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துவிடுகிறது. அவருக்கு இணையாக மற்ற குழந்தைகளும் சத்தமாக அவர் சொல்லிக் கொடுக்கும் எழுத்துகளை பாடுகின்றனர். ஒவ்வொரு முறையும் சொல்லி முடித்துவிட்டு மற்ற குழந்தைகள் சொல்லும் வரை அந்த குழந்தை காத்திருக்கிறது.

குழந்தையின் இந்த சுறுசுறுப்பான மற்றும் வேடிக்கையான பாணியைப் பார்த்து, மக்கள் அவரை மிகவும் ரசிக்கிறார்கள். இந்த வீடியோவைப் பார்த்த பயனர் ஒருவர், ஹிந்தி கற்பிப்பதற்குப் பதிலாக, குழந்தை இராணுவ வகுப்புகளை எடுப்பதாகத் தெரிகிறது என்று எழுதினார். இது குழந்தை ஒரு பூ அல்ல, நெருப்பு, இது நாட்டுக்கு மிகவும் தேவை என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | என்ன அழகு எத்தனை அழகு..தொகை விரித்து நடனமாடும் வெள்ளை மயில்: வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News