Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!

கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக  காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் பொதுவாக நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2023, 05:13 PM IST
  • கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக காணப்படும் பறவைகள்.
  • கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை.
  • அதிலும், பச்சை நிற கிளிகள் பொதுவாக நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன.
Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!  title=

சமூக ஊடகங்களில் தின தினம் பெரும்பாலானோர், தங்கள் நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதிலும், ட்ரோல்களைப் படிப்பதிலும் செலவிடுகிறார்கள். மக்கள் தனிமை, கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்கும் நேரம் இது. இவை அனைத்திலிருந்தும் தற்காலிக நிவாரணம் பெற இது போன்ற வீடியோக்கள் மக்களுக்கு உதவுகின்றன. அதனால் தான் தினமும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களில் இன்ஸ்டாகிராம் ரீல்கள், நகைச்சுவை படங்கள், யூடியூப் வீடியோக்கள் என பல மிகவும் வைரலாகி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது. இதுபோன்ற வீடியோக்களில், விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களில் பெரும்பாலானோர் சிறப்பு ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால், இவை மனதை லேசாக்குவபவையாக உள்ளன. தற்போது கிளி ஒன்றின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக  காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் பொதுவாக நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை.  ஆனால் நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் கிளிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. தற்போது வைரலாகும் கிளி வீடியோ ஒன்றில் வைராலாகும் வீடியோவில், பேப்பர் ஒன்றை லாவகமாக கிழித்து, தனக்கு இறக்கையாக சொருகிக் கொள்ளும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

மேலும் படிக்க | Viral Video: இது பறவை இல்லை சத்தியமா மீன் தான்.. இணையவாசிகளை திகைக்க வைத்த பறக்கும் மீன்!

Furry Tails  என்ற ஃபேஸ்புக் கணக்கினால் பகிரப்பட்ட வீடியோ இது. இந்த வீடியோவில், ஒரு கிளி காகிதத்தை நீளமாக கிழித்து, இறகுகளுக்கு இடையில் சொருகிக் கொள்கிறது. கிளி தனது இறக்கையில் மேலும் இறகுகளை சேர்த்துக் கொள்வது போல் தெரிகிறது.  கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறப்பு வாய்ந்தவை. விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என கூறப்படுகிறது . கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. 

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News