மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..

Viral Video Of Fishes Fighting With Each Other : மீனும் மீனும் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 19, 2024, 06:38 PM IST
  • மீன்களுக்குள் சண்டை
  • ஆழ்கடல் வீடியோ
  • இதை பாருங்கள்..
மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ.. title=

Viral Video Of Fishes Fighting With Each Other : உலகில், எந்த மூலையில் என்ன விஷயம் நடந்தாலும், அது வெகு விரைவிலேயே தொலைப்பேசிக்குள் வந்து நுழைந்து விடுகிறது. கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த கைப்பேசியில், உலகமே அடங்கிவிட்ட நிலையில், பல ஆச்சரியப்படுத்தும் விஷயங்களும் வந்து சேருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது:

வைரல் வீடியோ:

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோ, கடலில் எடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் கருப்பு நிறத்தில் இருக்கும் மீன் ஒன்று வந்து இன்னொரு மீனை சீண்ட, அப்படியே அந்த சண்டை தொடர்கிறது.

அதனுடன் சண்டை போடும் இன்னொரு மீன், கருப்பு-வெள்ளை என நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது. பின்னர் அந்த மீன் பயந்து ஓட, விடாமல் பெரிய மீன் அதை துரத்தி வருகிறது. இப்படியே அந்த சனை முடிகிறது. இதையடுத்து, இந்த வீடியோவை பதிவிட்டவர், “மாறுவேடப்போர்” என்று கூறி பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | பறந்து வந்து அடாக் செய்த பாம்பு: பதறிய நபரின் அதிரடி ட்விஸ்ட்... வைரல் வீடியோ

மீன்கள் சண்டை போடுமா?

மீன்கள், சண்டை போடுவதற்கு எப்போதும் ரெடியாக இருக்குமாம். குறிப்பாக ஒரு மீனின் எல்லைக்குள் இன்னொரு மீன் வந்து விட்டாலோ அல்லது அதன் கூட்டுக்குள் வந்துவிட்டால் சண்டை போடுமாம். பல சமயங்களில் ஒரு மீனின் இணையுடன் இன்னொரு மீன் இணைய வரும் போதும் சண்டை வருமாம். ஒரு சில மீன்கள், உயிர் போகும் வரை சண்டையிடுவதாக கூறப்படுகிறது. இது, கடலில் மட்டுமல்ல மீன் தொட்டியிலும் கூட நடக்குமாம். பல மீன்கள் இருக்கும் தொட்டியில் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நடனத்தினால் கிரங்கடிக்கும் வண்ண வண்ண மயில்கள்... நெடிசன்களை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News