நாயிடம் கண்ணாமூச்சி ஆடிய பூனை! வைரல் வீடியோ!

பூனை ஒன்று மறைந்திருந்து நாயுடன் கண்ணாமூச்சி ஆடிய வீடியோ இணையத்தில் பலரின் கவனங்களை ஈர்த்து வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 8, 2022, 06:57 PM IST
  • நாயிடம் விளையாடும் பூனை.
  • கண்ணாமூச்சி ஆடிய பூனை.
  • இணையத்தில் வீடியோ வைரல்.
நாயிடம் கண்ணாமூச்சி ஆடிய பூனை! வைரல் வீடியோ! title=

பொதுவாக நாய் மற்றும் பூனை வீடுகளில் விரும்பி வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் ஆகும்.  அந்த நாய்க்குட்டிகளின் குறும்புகளும், பூனை குட்டிகளின் குறும்புகளும் பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்.  இவற்றின் குறும்புகளை தனித்தனியாக பார்ப்பதே ரசிக்கும்படியாக இருக்குமானால், இவை இரண்டும் ஒன்றிணைந்து செய்யும் குறும்புகள் எப்படி இருக்கும், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  சிறிய பூனை ஒன்று பெரிய நாயிடம் மறைந்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடும் காட்சி இணையத்தில் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தி பலரையும் ரசிக்க செய்துள்ளது.

மேலும் படிக்க | தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் பூனை -வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் பக்கத்தில், சிசிடிவி இடியட் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில் கருஞ்சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கலந்த பூனை ஒன்று வீட்டில் அழகிற்காக வைத்திருக்கும் பூந்தொட்டிக்கு கீழே சென்று ஒளிந்து கொள்கிறது.  அதனருகில் உள்ள அறைக்குள் வெள்ளை நிறத்தில் பெரிய நாய் ஒன்று உள்ளது.  அந்த அறையின் கதவை மூடி இருப்பதால் நாய் கதவை திறக்க முயற்சி செய்கையில் அதனை வளர்ப்பவர் வந்து கதவை திறந்து விடுகிறார்.  அந்த நாய் வெளியே வந்ததும் சுவரோரமாக மறைந்திருந்த பூனை நாயின் முன் குதிக்கிறது.  பிறகு அந்த நாய் தனது வாயை பூனையின் மீது வைத்து கொஞ்சுவதுடன் இந்த வீடியோ நிறைவு பெறுகிறது.  

 

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.  இந்த வீடியோ உடன் 'சர்ப்ரைஸ்' என்கிற கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ள பின்னணி இசையும் இந்த காட்சிக்கு பலம் சேர்த்துள்ளது, பூனையின் குறும்புத்தனத்தை பார்த்து பலரும் சிறப்பான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ஒய்யாரமாய் உலாவந்த ஒற்றையானை: அச்சத்தின் உச்சிக்கு போன வாகன ஓட்டிகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News